இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இன்றோடு சினிமாவுக்கு வந்த 30 வருடங்கள் கழிந்திருக்கின்றன. 'நாளைய தீர்ப்பு' படம் மூலமாக விஜய்க்கு சினிமா கதவை தந்தை எஸ்.ஏ.சி திறந்து வைத்தாலும், ஆரம்பத்தில் அந்த பாதையில் நடைபோட விஜய் திணறினார் என்பதே நிதர்சனம். இதனை தொடர்ந்து விஜய் தனது அடுத்தடுத்து திரைப்படங்களில் தனது நடிப்பை மற்றும் நடனத்தை மெருகேற்றிக் கொண்டு, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
90களில் காலகட்டத்தில் விஜய் நடித்த வந்த சில படங்கள் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து நடிகர் விஜய் படிப்படியாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரத் தொடங்கினார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் விஜய், மிக முக்கிய வசூல் மன்னனாக உருவெடுத்துள்ளார். நடிகர் விஜய்க்கு என்ன தனி ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகர் விஜய்க்கு அரசியல் மீது தொடர்ந்து ஆர்வம் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் மற்றும் நடிகர் விஜய்க்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில வருடங்களாகவே விஜய் மக்கள் இயக்கப் பணிகளை துரிதப்படுத்த துவங்கியுள்ள நடிகர் விஜய். இதன் ஒரு பகுதியாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மற்றும் நகர் புறத் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போட்டியிட அனுமதி வழங்கியிருந்தார். சமீபத்தில் கூட நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து எடுத்துக்கொண்டது பேசுபொருளானது. இந்நிலையில் விஜய் தனது முப்பது வருட கால சினிமா கலை வாழ்க்கையை கடந்து இருப்பது விஜய் ரசிகர் மற்றும் விஜய் மக்கள் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று செங்கல்பட்டு நகர் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள், உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பிரியாணி வழங்கினர். முன்னதாக செங்கல்பட்டு நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதி பெருமக்களுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகம் சார்பில் போர்வை வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்