11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகள் இரண்டு சுற்றுகளாக ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன.


11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌ விவரம்‌:


25.04.2022 முதல் 28.04.2022 (வியாழன்‌) வரை


28.04.2022 (வியாழன்‌) முதல்‌ 02.05.2022 (திங்கள்‌) வரை.


 


இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:


'' 11ஆம்‌ மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகளை எந்தவித புகார்களுக்கு இடம்‌ அளிக்காமல்‌ நடத்த முதன்மை கண்காணிப்பாளர்களான செய்முறைத்‌ தேர்வு மைய பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ முதல்வர்கள்‌ அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌.


செய்முறைத்‌ தேர்வு விதிமுறைகள்‌


1. செய்முறைத்‌ தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம்‌ மாதிரி வினாத்தாள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ ஒதுக்கீடு பாடவாரியாக சென்னை முதன்மைக்‌ கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம்‌ செய்யப்பட்‌டுள்ளது.


2. செய்முறைத்‌ தேர்வுகள்‌ கீழ்‌க்காணும்‌ கால அட்டவணையின்படி நடத்த அறிவுறுத்தப்படுகிறது. 


பேட்ச் 1: காலை 8.00 மணி முதல்‌ 10.00 மணி வரை


பேட்ச் 2: காலை 10.15 மணி முதல்‌ 1215 மணி வரை


பேட்ச் 3: பிற்பகல்‌ 12.45 மணி முதல்‌ மாலை 2.45 மணி வரை


பேட்ச் 4: மாலை 3.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை.


3. ஒரு பேட்ச்சுக்கு 25 முதல்‌ அதிகபட்சம்‌ 30 மாணவர்களுக்கு வரை செய்முறைத்‌ தேர்வு நடத்தலாம்‌.


4. ஒரு பாடத்தில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை 120 மற்றும்‌ அதற்குக் கீழ்‌ இருப்பின்‌ ஒரே நாளில்‌ அப்பாடத்தின்‌ செய்முறைத்‌ தேர்வு முடிக்கப்பட வேண்டும்‌. (நாள்‌ ஒன்றுக்கு 4 பேட்ச்கள்‌ நடத்தப்பட வேண்டும்‌)


5. மாணவர்‌ எண்ணிக்கை கூடுதலாக உள்ள பள்ளிகளுக்கு ஒரு பாடத்திற்கு 2 புறத்தேர்வர்கள்‌ நியமிக்கப்பட்டிருப்பர்‌. 25.04.2022 முதல் 02.04.2022-க்குள்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ (11 மற்றும்‌ 12) செய்முறைத்‌ தேர்வுகள்‌ முடிக்கப்படுமாறு திட்டமிடப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்‌.


6. செய்முறைத்‌ தேர்வுக்கான கால அளவு 2மணி நேரமாக மாற்றப்பட்‌டுள்ளது.


7. புறத்தேர்வர்கள்‌ செய்முறைத்‌ தேர்வு நடைபெறுவதற்கு முன்பே புறத்தேர்வராக நியமிக்கப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ அகத்‌ தேர்வாளர்களுடன்‌ அறிவியல்‌ ஆய்வக உபகரணங்களுக்கேற்ப செய்முறைத்‌ தேர்வுக்கான வினாத்தாட்களை தீர்மானித்துக்‌ கொள்ளலாம்‌.


8. முதன்மைக்‌ கண்காணிப்பாளர்களான தலைமையாசிரியர்‌,முதல்வர்கள்‌ செய்முறைத்‌ தேர்வு நியமன ஆணையின்பம அந்தந்த புறத்தேர்வர்களை தேர்வு தொடங்குவதற்கு ஒரு நாள்‌ முன்னதாகவே விடுவிக்க வேண்டும்‌.


9. எக்காரணம்‌ கொண்டும்‌ புறத்தேர்வர்களுக்கான நியமன ஆணை ரத்து செய்யப்படாது.


10. செய்முறைத்‌ தேர்வு நடைபெறும்‌ நாட்களில்‌ விடைத்தாட்கள்‌ அன்றே திருத்தப்பட்டு மதிப்பெண்‌ பட்டியல்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.


11. விடைத்தாள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ பட்டியலை முதன்மைக்‌ கண்காணிப்பாளர்கள்‌ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்‌.


12. தேர்வு முடிந்தபின்‌ மதிப்பெண்‌ பட்டியலை நோடல்‌ மையத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.


13. செய்முறைத்‌ தேர்வில்‌ (அக மற்றும்‌ புறத்தேர்வு) வழங்கப்பட்ட மதிப்பெண்களைப் பதிவேடுகளில்‌ எழுதி முதன்மைக்‌ கண்காணிப்பாளரின்‌ பொறுப்பில்‌ வைத்துக்‌கொள்ள வேண்டும்‌. முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌ அல்லது புறத்தேர்வாளர்‌ அல்லது அகத்தேர்வாளர்‌ எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ அக/ புறத்தேர்வு மதிப்பெண்களை வெளியிடக்‌ கூடாது.


14. புறத்தேர்விற்கு வராத மாணவர்களுக்கு அக மதிப்பெண்கள்‌ இருந்தால்‌ வழங்க வேண்டும்‌. அகமதிப்‌பெண்கள்‌ இல்லாத பட்சத்தில்‌ “AA” என்றும்‌ புறத்தேர்விலும்‌  “AA” என்றும்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ வரிசையில்‌ “AAA”‌ என்றும்‌ பதிவிட வேண்டும்‌.


15. மதிப்பெண்‌ பட்டியலில்‌ கையெழுத்திடுவதற்கு முன்பாக முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌ மதிப்பெண்கள்‌ மற்றும்‌ அக,புறத்‌ தேர்வாளர்களின்‌ கையெழுத்துகள்‌ சரியான இடங்களில்‌ உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்‌.


16. தேர்வுகள்‌ முடிந்தபின்‌ அனைத்து மதிப்பெண்‌ பட்டியல்களை ஒரே உறையில்‌ வைக்க வேண்டும்‌. (Legal Size Green Cloth Cover) 


17. வருகைச் சான்றிதழ்‌ அந்தந்த மையங்களில்‌ பாதுகாக்கப்பட வேண்டும்‌. நோடல்‌ மையங்களுக்கு அனுப்பத் தேவையில்லை.


18. நோடல்‌ மையங்களுக்கு அனுப்ப வேண்டிய உறைகள்‌ பின்வருமாறு:


* பொது மற்றும்‌ தொழிற்கல்விகளுக்கான அனைத்து செய்முறைத்தேர்வு மதிப்பெண்‌ பட்டியல்கள்‌ பாட வாரியாகவும்‌, பேட்ச் வாரியாகவும்‌ கட்டப்பட்டு நீண்ட பச்சைநிற துணி உறையில்‌ Log Sheetஉடன்‌ வைக்கவேண்டும்‌. ( தேர்வு மைய பள்ளிகள்‌ மற்றும்‌ இணைப்பு பள்ளிகளுக்கு
தனித்தனி உறைகள்‌ அமைக்க வேண்டும்‌.)


* படிவம்‌ ஏ மற்றும்‌ படிவம்‌ பி ஆகியவற்றின்‌ நகல்களை ஒப்படைக்க வேண்டும்‌.


19. மதிப்பெண்‌ பட்டியலில்‌ காணக்‌ கூடிய பிழைகள்‌ (கடந்த வருடம்‌)


* அக மதிப்பெண்கள்‌ பதிவிடப்பட்டுள்ளது. ஆனால்‌ புற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ மொத்த மதிப்பெண்கள்‌ பதிவிடப்படவில்லை.


* மதிப்பெண்‌ பட்டியலில்‌ கையெழுத்துகள்‌ (அக, புறத்தேர்வாளர்கள்‌ மற்றும்‌ முதன்மைக்‌ கண்காணிப்பாளர்கள்‌.) விடுபட்டிருந்தது.


20. ஒரு பாடத்திற்கான பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட மதிப்பெண்‌ பட்டியலை வேறொரு பாடத்திற்குப் பயன்படுத்தக்‌கூடாது''.


இவ்வாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.