சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஏரிக்களில் இருந்து மழை காரணமாக தண்ணீர் நிறம் வருவது வழக்கம்.


கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகளில் நீர் மட்டம் கிடு, கிடுவென அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தண்ணீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டமும் அதிகரிக்கத்  அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் அதிகரித்து வந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்தும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது.  இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மிக வேகமாக நிரம்பி வந்தது.


22 அடியை எட்டியது


இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மற்றும் இன்று காலை  24 அடியில் 22 அடியை எட்டியது.  இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு சுமார்  400 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.  தொடர்ந்து இந்த தண்ணீரானது இரண்டு நாட்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் வரத்து குறித்து, கண்காணித்து வந்தனர். பொதுவாகவே செம்பரம்பாக்கம் ஏரி  தனது 22 அடியை எட்டும் பொழுது நீரின் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.   


100 கன அடி நீர் ஏரியிலிருந்து


அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில்  இன்று காலை நிலவரப்படி  24 அடியில் 22.5 அடியாக நீர் இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் சுமார் 3.6 டிஎம்சி தண்ணீர்  சேகரிக்க முடியும்.  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பானது  3.1  டிஎம்சி நீராக உள்ளது.  இதனை அடுத்து  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து இன்று மாலை 4 மணியளவில் சுமார் 100 கன அடி நீர் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டது. ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை  உள்ளிட்ட பகுதி வழியாக சென்று   அடையாற்றில் தண்ணீர்   கலக்கும்.


முன்னதாக இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ’’சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும்.  இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின்  நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு  மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம்  ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால்   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளநீர் போக்கி வழியாக  100 கனஅடி  உபரி நீர் திறக்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது.


 எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.