சென்னை எழும்பூர் (எக்மோர்) - விழுப்புரம் வழித்தடமான கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, தாம்பரம் - சென்னை கடற்கரை மற்றும் சென்னை சென்ட்ரல் - திருவள்ளூவர் இடையேயான 44 மின்சார ரயில்கள் இன்று சில மணி நேரங்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:
- இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை காலை 10.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை
- இன்று தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை, காலை 10 மணி முதல் மதியம் 3:30 மணி வரை
- இன்று செங்கல்பட்டு - கடற்கரை இடையேயான ரயில் சேவை, காலை 9.40 மணி முதல் மதியம் ஒரு மணி வரை
- மூர்மார்க்கெட் (சென்னை சென்ட்ரல் புறநகர் ) முதல் காலை 4.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கு புறப்படும் ரயில்
- மூர்மார்க்கெட் (சென்னை சென்ட்ரல் புறநகர் ) திருவள்ளூருக்கு காலை 4.30 மணிக்கு புறப்படும் ரயில்
- மூர்மார்க்கெட் (சென்னை சென்ட்ரல் புறநகர் ) அரக்கோணத்துக்கு 5.30 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து
- மூர்மார்க்கெட்(சென்னை சென்ட்ரல் புறநகர் ) திருவள்ளூருக்கு மாலை5.40 மணிக்கு புறப்படும் ரயில்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட இடைவெளிக்கு மத்தியில் சிறப்பு ரயில்கள் அவ்வபோது இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, 12.30, 12.50, 1, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறு மார்க்கமாக காலை 9.40, 10.20, 10.55, 11.30, 12, 12.20,1 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.