10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பள்ளிகள் வாயிலாகவும், இணையம் மூலம் பெற முடியும். 


10, 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கடந்த ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அன்று காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இந்நிலையில், 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை எப்படிப் பதிவிறக்கம் செய்வது? 


தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌


மே 2022, பத்தாம்‌ வகுப்பு / பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வழுதிய பள்ளி மாணவர்கள்‌ 24.06.2022 முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ வழியாகவும்‌, தனித் தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள்‌ வழியாகவும்‌, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியலைப் பெற்றுக்‌ கொள்ளலாம்‌.


இணையம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்


மேலும்‌, 24.06.2022 முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ பள்ளி மாணவர்கள்‌ / தனித்தேர்வர்கள்‌ தங்களுக்கான தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற www.dge.tn.nic.in இணையதளத்திலும்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.




பத்தாம்‌ வகுப்பு தேர்வர்கள்‌ - மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை


மே 2022, பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தாம்‌ தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும்‌ பள்ளி மாணவர்கள்‌ / தனித்தேர்வர்கள்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்‌.


மே 2022 பத்தாம்‌ வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின்‌ மதிப்‌பெண்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை தங்கள்‌ பள்ளி வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையம்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.


பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்வர்கள்‌ - விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌-। விண்ணப்பிக்கும்‌ முறை


விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌. அந்த வகையில் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண