இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வெப்பநிலை உயர்வால் திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும். இதனால், பொதுமக்கள், விவசாயிகள் திறந்த  வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.




மேலும், ‘வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று வடதமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.