Chengalpattu Budget Highlights: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது, என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
25 ஆண்டு கால கனவு
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 25 ஆண்டு கால கோரிக்கையின் அடிப்படையில், செய்யூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.
மின்சாரம் தயாரிக்கும் ஆலை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில், 1500 டன் மறுசுழற்சி மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவு செயலாக மூலம், தினமும் 15 முதல் 18 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு அருகில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில், திடக்கழிவிலிருந்து மின்சாரத் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது.
தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம்
தமிழ்நாட்டிற்கு வரும் பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் பெருமை மற்றும் சிறப்புகளை அறியும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியங்கம் அமைக்கப்பட உள்ளது.
சென்னைக்கு ஆறாவது நீர்த்தேக்கம்
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலத்தில், பருவ காலங்களில் கிடைக்கும் வெள்ளை நீரின் ஒரு பகுதியை, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
சுமார் 4375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டிஎம்சி கொள்ளளவில் ஆண்டிற்கு இரண்டு புள்ளி 2.5 டிஎம்சி அளவிற்கு வெள்ளை நீரை சேமிக்கும் வகையில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த நீர்த்தேக்கம் சென்னையின் ஆறாவது நீர் தேக்கமாக உருவெடுக்கும். இதற்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது.
மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு
சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை ஏற்கும் போக்குவரத்து அமைப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுமார் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு, இந்த வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
ரோப்வே ( RopeWay)
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அப்பகுதியில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் கொண்டு ரோப் வே எனும் உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்த சாத்திய கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன கட்டமைப்பு வசதிகள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் தேவை நிறைவு செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோன்று மாமல்லபுரத்தில் தனித்தனியே வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ஒருங்கிணைந்த நிதி 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா வழித்தடம்
சுற்றுலாத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்திடும் பொருட்டு, மாமல்லபுரம்-மரக்காணம் வரையிலான கடலோர சுற்றுலா வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
மீனவர்களுக்கு கட்டமைப்பு வசதிகள்
மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன் இறங்கு தளம், மீன்பிடி வலை பின்னுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருங்குழி - மாமல்லபுரம் சாலை திட்டம்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை புதிய நான்கு வழிச்சாலை சுமார் 28 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைதியிட சாத்திய கூடுதல் ஆராயப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .