சாதித்த அரசு பள்ளி மாணவர்களின் பட்டியல்


 செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரி பள்ளி -   ஸ்ரீலேகா . G - 496
  அரசு உயர்நிலைப்பள்ளி  சிங்கப்பெருமாள் கோவில் -   சௌந்தர்யா .R -  493
  அரசு உயர்நிலைப்பள்ளி பழைய பெருங்களத்தூர் -   ஜெயவர்ஷினி A.M  - 493
  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நந்திவரம் செங்கல்பட்டு -  அபிராமி .M - 491
 பெண்கள் மேல்நிலைப்பள்ளி  குரோம்பேட்  ஹரிணி .G - 490
  அரசு உயர்நிலைப்பள்ளி  வட மணிபாக்கம்  அனுசியா S -490
  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குரோம்பேட் -  ஜனனி V 489
 அரசு உயர்நிலைப்பள்ளி புத்திரன் கோட்டை  ரோஷினி P - 489
 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செங்கல்பட்டு - ஷெச்சினா W - 488
 அரசு உயர்நிலைப்பள்ளி மாம்பாக்கம் கிருத்திகா A - 488
  புகழேந்தி புலவர்  அரசு உயர்நிலைப்பள்ளி  பொன்விளைந்த களத்தூர் -   செந்தமிழ் செல்வன் P - 488
 நகராட்சி உயர்நிலைப்பள்ளி அஸ்தினாபுரம்   தீபிகா R - 488
  அரசு உயர்நிலைப்பள்ளி மேடவாக்கம் சந்தோஷ் குமரன் T - 488
  எம் பி பி  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  கிழக்கு தாம்பரம்   ரித்திகா R - 488


100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்


செங்கல்பட்டு மாவட்டத்தில் 8   அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 30 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.    அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த தேர்வு எழுதிய 43 மாணவர்களும்   தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மானாமதி  தேர்வு எழுதிய 29 மாணவிகளும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.  


அரசு உயர்நிலைப்பள்ளி கடுகளவு தேர்வு எழுதிய 41 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.  போந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 44 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்ற அசத்தியுள்ளனர்.


அதேபோன்று நீலமங்கலம் மற்றும் பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த  மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி இரும்பேடு 100% தேர்ச்சி பெற்ற நிலையில் பத்தாம் வகுப்பிலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.   100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை போல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு,  வருகின்ற ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டம் முதல் 10 இடங்களில் செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது


செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள் என்ன ? ( Chengalpattu 10th Result )


செங்கல்பட்டு மாவட்டத்தில் 15968  மாணவர்களும்,15948 மாணவிகளும் மொத்தம் 31916 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இவற்றில் 13,317 மாணவர்களும்,  14 ஆயிரத்து 572 மாணவிகளும் மொத்தம் 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்  83.40,  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.37, மாவட்ட மொத்த தேர்ச்சி சதவீதம் 87.38 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு  என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு  சதவீதம்  88.27 ஆக இருந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.  33வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் பிடித்துள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 79.20 ஆக உள்ளது. அரசு பள்ளி தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 36-வது இடத்தை செங்கல்பட்டு பிடித்துள்ளது.