செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள் என்ன ? ( Chengalpattu 10th Result )


செங்கல்பட்டு மாவட்டத்தில் 15968  மாணவர்களும்,15948 மாணவிகளும் மொத்தம் 31916 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர். இவற்றில் 13,317 மாணவர்களும்,  14 ஆயிரத்து 572 மாணவிகளும் மொத்தம் 27 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்  83.40,  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.37, மாவட்ட மொத்த தேர்ச்சி சதவீதம் 87.38-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு  என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு  சதவீதம்  88.27 ஆக இருந்தது.


கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.  33வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் பிடித்துள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 79.20 ஆக உள்ளது. அரசு பள்ளி தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் 36-வது இடத்தை செங்கல்பட்டு பிடித்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்று மாணவர்களின் பட்டியல்



செங்கல்பட்டு   மாவட்ட  அரசு மாதிரி  பள்ளியை சேர்ந்த மாணவி ஸ்ரீலேகா .ஜி  என்ற மாணவி 496 மதிப்பெண் பெற்று  முதலிடம் பிடித்துள்ளார்.    இதே போன்று  தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன்  பள்ளியை சேர்ந்த மாணவி அக்ஷயா மற்றும்  குரோம்பேட்  மார்க்ஸ்  மெட்ரிகுலேஷன் பள்ளி  மாணவர் ஷ்யாம் ஆகியோர் 496 மதிப்பெண்களைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.


செவன்த் டே கல்பாக்கம்  பள்ளியை சேர்ந்த  மாணவி பிரதிக்ஷா,  மேலர் கோட்டையூர் சென் ஜோசப்  பள்ளியை சேர்ந்த மாணவி ஷிவானி,  ஹோலி ஃபேமிலி பள்ளியை சேர்ந்த மாணவி அக்ஷயா,  ஸ்ரீ சங்கர வித்யாலயா தாம்பரம் பள்ளியை சேர்ந்த ஹரிணி, சீயோன் பள்ளியை சேர்ந்த  மாணவி லிடியா,  என் எஸ் என்  பள்ளியை சேர்ந்த  மாணவன்  பத்தால் நிர்மல்,  ஆகியோர் தலா 495 மதிப்பெண்கள் பெற்று  மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.  இதே போன்று 14  மாணவர்கள்  494 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.


தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுத்த அரசு பள்ளி மாணவி


 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர்  அருகே செங்கல்பட்டு மாவட்ட அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு  உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்த மாணவி  ஸ்ரீலேகா 496 மதிப்பெண்களைப் பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.  அரசு பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று  சாதித்துள்ளார்  தனியார் பள்ளிகளுக்கு நிகராக மதிப்பை நிறுத்திருப்பது  அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.   ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த மாணவி   ஸ்ரீலேகா,  இவரது தந்தை  அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.  இவர் தமிழ் பாடத்தில் 98,  ஆங்கிலத்தில் 99,  கணக்கு பாடத்தில் நூற்றுக்கு 100,  அறிவியல் பாடத்தில் 99,  சமூக அறிவியல் பாடத்தில் 100   மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.


 அசத்திய அரசுப்பள்ளி


அரசு மாதிரி பள்ளியில் படித்த 30  மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.  அரசு மாதிரி பள்ளியில்  மூன்று மாணவர்கள் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு,  ஒரு மாணவர்  சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து அசத்தியுள்ளார்.  இதேபோன்று இப்பள்ளியில்   மாணவர்களுக்கு    நுண்கலை,  கல்வி,  விளையாட்டு  போட்டித் தேர்வுக்கான பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது.  மாணவர்கள் பள்ளியிலேயே தங்கி பயில்வதற்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.  அதே போன்று பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ்,  அதே போன்று வெளிநாடுகளில் படிப்பதற்கு  தயார்படுத்தும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.