செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே கேட் மூடப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில்


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையை திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொளத்துார், ஆப்பூர், சாஸ்திரம் பாக்கம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் முக்கிய சாலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.


Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!


பிரதான நுழைவு வாயில்


ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன. இந்நிலையில் ரயில்வே கேட் பாதை சீரமைப்பு, புதியதாக தண்டவாளங்கள் பொருத்தல் மற்றும் தண்டவாளங்களுக்கு இடையே பொருத்தப்படும் சிமென்ட் துாண்கள் அமைக்கும் பணிகள் சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணி முடியாததால் இரவிலும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதன் காரணமாக நவம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் நம்பர் ஒன்றாம்-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ரயில்வே கேட் திறக்கப்படாது எனவும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் நோக்கி வரும் வாகனங்கள் ஆத்தூர் வழியாக மறைமலைநகர் சென்று அங்கிருந்து செங்கல்பட்டு நோக்கி மற்றும் தாம்பரம் நோக்கி செல்லலாம் என தென்ன ரயில்வே சார்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


இந்த பகுதியில் ரயில்வே கேட்டிருப்பதால் ஏற்கனவே பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரகடம் செல்ல விரும்பும் வாகனங்களும் இதன் வழியாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் பாலம் மிக வேகமாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் இதுபோன்ற பிரச்சனையை தவிர்க்கலாம் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.