நாளை (02.12.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா அறிவித்துள்ளார்.

Continues below advertisement

தொடரும் கனமழை - Red Alert Rain 

"டிட்வா" தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது, சென்னைக் கடற்கரையில் இருந்து சுமார் 50 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது சென்னைக் கடற்கரைக்கு அருகே தொடர்ந்து நிலை கொண்டு அடுத்த ஒரிரு நாட்களில் படிப்படியாக முழுமையாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்தநிலையில் இன்று காலை 6 மணி வரை அமைதி காத்து வந்த மழை 7 மணிக்கு பிறகு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. சுமார் 5 மணி நேரமாக சென்னையில் மிதமான மழையானது கொட்டி வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். 

Continues below advertisement

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . நாளை காலை 8 மணி வரை மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை - Chengalpattu School Leave Tommorow 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அவ்வப்போது தூரல் பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. விடுமுறை விடாததால் இன்று பள்ளிக்கு சென்று இருந்த மாணவ மாணவிகளும், பெரிதும் பார்த்திபடைந்திருந்தனர்.

இந்தநிலையில், நாளை (02.12.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, அறிவித்திருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை

பொதுமக்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 54 இடங்களில் சமூக சமையளறைகள் தயார் நிலையில் உள்ளன. மின்வாரியம் மூலம் மின்கம்பங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலையில் மக்கள் தங்குவதற்காக 287 வெள்ள நிவாரண முகாம்கள் 20 புயல் பாதுகாப்பு மையங்களும் தயார்நிலையில் உள்ளன. 

கூடுதலாக கானாத்தூர் நெம்மேலி பட்டிபுலம் ஆகிய இடங்களில் 3 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும் செயல்பாட்டில் உள்ளன. 

தாம்பரம் மாநகராட்சி முடிச்சூரில் 30 நபர்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. மேலும் கூடுவாஞ்சேரியில் 25 நபர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 390 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

உதவி எண்கள் அறிவிப்பு..

மழைக்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டாரை இயங்கி வருகிறது. புகார் தெரிவிக்க 044-27427412-14 மற்றும் whatsapp மூலம் புகார் தெரிவிக்க 9444272345 ஆகிய எண்களில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.