அச்சரப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய் கடித்ததில் சிறுவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி


அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்


சமீபகாலமாக தமிழ்நாட்டில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெரு நாய்கள் முறையாக கண்காணித்து அவை கருத்தடை செய்யப்படாததால், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் சிறுவர்கள் மற்றும் வயதானவர்களை நாய்கள் கடிப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அவ்வப்பொழுது இதுபோன்று தெரு நாய் கடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை அம்பத்தூர் பகுதியில் ஆறு வயது சிறுமியை தெரு நாய் கடித்ததில் அந்த குழந்தையின் முகம் சிதைந்தது, அதேபோன்று அவ்வப்பொழுது நாய் கடிப்பதால்தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பாதிப்படைந்து வருகின்றனர்.


இரண்டு சிறுவர்கள் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே விண்ணம்பூண்டி கிராமத்தில் தெரு நாய்கள் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் நாய்களால் தெருவில் பெண்கள், மூதாட்டிகள், சிறுவர், சிறுமிகள் தெருவில் நடந்து  சொல்ல முடியாது நிலை உள்ளது. இந்த தெரு நாய் கூட்டத்தில் ஒரு சில நாய்களுக்கு வெறி பிடித்திருக்கிறது. அந்தப் பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து உள்ளன. தற்போது நாய்களுக்கு அதிகமான வெறி பிடித்து உள்ளது.


கிராமத்தில் சசிகுமார், சிவகாமி ஆகியோரின் மகன்கள் ஹரிஷ், சஞ்சய் என்ற சிறுவனை தெரு நாய் கடித்தன. அங்கிருந்தவர்கள் சிறுவர்கள் இருவரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விண்ணம்பூண்டி ஊராட்சியில் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.  தெரு நாய்கள் குழந்தைகளை கடித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்