விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு  நாம்தமிழர்கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டதிற்கு நாம்தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.முன்னதாக கூட்டம் நிறைவடையும் தருவாயில் தாமதமாக வந்த சீமான், தேர்தல் நடத்தை விதியை மீறி கூட்ட அனுமதி நேரமான 10 மணியை தாண்டி உரையாற்றினார். 


இதனையடுத்து தேர்தல் நடத்தை விதியை மீறியதாக விருதுநகர் தேர்தல் பொறுப்பாளர் மோகனகுமார் சீமான் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 188ன் கீழ்,  தண்டனை சட்டம்143 பிரிவின் கீழ் 2 வழக்குகள் சீமான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.