Breaking News LIVE : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

உமா பார்கவி Last Updated: 21 Mar 2023 05:56 PM
திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது.

Breaking News LIVE : மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் மாநிலங்களவை பணிகள் 7வது நாளாக பாதிப்பு - அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் அறிவிப்பு 

Breaking News LIVE : தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு-மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE : வேங்கைவயல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி

புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் போலீஸ் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் ஆவணங்களை சமர்ப்பித்த தமிழக அரசு 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல்.

Breaking News LIVE : வதந்தி வீடியோ - பாஜக நிர்வாகி உம்ராவுக்கு முன்ஜாமீன்

பீகார் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய டெல்லி பாஜக நிர்வாகி உம்ராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking News LIVE : அதானி விவகாரம் - விவாதிக்க கோரி திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் நோட்டீஸ்.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ 44,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,570 ஆக விற்பனையாகிறது. 

Breaking News LIVE : தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு


தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 1000 கன அடியிலிருந்து 3 ஆயிரம் கன அடியாக உயர்வு - டெல்டா பகுதியில் மழை காரணமாக தமிழகத்திற்கு காவிரி  நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

Breaking News LIVE : தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா - அமைச்சர் அவசர ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை 

Breaking News LIVE : அதிகரிக்கும் கொரோனா - தமிழக அரசு இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  

Breaking News LIVE : அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதம்

சென்னை அம்பத்தூர் ஆவின் பண்ணையிலிருந்து பால் விநியோகம் ஒருமணி நேரம் தாமதமாக நடைபெற்றுள்ளது.  ஒப்பந்த ஊழியர்கள் பற்றாக்குறையால் காலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பால் விநியோகம் காலை 5.30 நிறைவு பெற்றுள்ளது. 

Breaking News LIVE : தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து 3,000 கனஅடியாக உயர்வு

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில்  காவிரி நீர்வரத்து 1,000 கனஅடியிலிருந்து 3,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.  டெல்டா பகுதிகளில் மழை காரணமாக தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனாலும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. இந்தியாவும் அதற்கான முயற்சியில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 


இந்தியாவில் 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருவதால்  பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. ஆக, எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் விலை நிலவரத்தை மக்கள் கண்காணித்து வருகிறார்கள்.


304வது நாள்:


சென்னையில் இன்று (மார்ச்.21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து விலை மாற்றமின்றி 304வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். 









 


இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. அதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.