Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 01 Jul 2024 09:23 PM
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு

கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேர் கைது

சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

2024ம் ஆண்டு சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்

2024ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் சிரிப்பலை

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் சிரிப்பலை


 





ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி

ஒட்டுமொத்த இந்துக்களையும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். 





அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா

பாசிசத்தை கடைபிடிக்கும் பாஜக, அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச அருகதை இல்லை என எம்.பி ஆ. ராசா தெரிவித்துள்ளார். 

பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 

பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது என குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்.பி ஆ. ராசா தெரிவித்திருக்கிறார். 

ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு? - மஹுவா மொய்த்ரா

ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு என எம்.பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.   





” தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி” - எம். பி. மஹுவா மொய்த்ரா

ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை, தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதாக  எம். பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் பேச்சு 

இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் கூறியது கண்டனத்துக்குறியது - நிர்மலா சீதாராமன்

இந்துக்களை வன்முறையாளர்கள் என ராகுல் காந்தி கூறியது கண்டனத்திற்குரியது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

வெறுப்பை விதைப்பவர்கள் இந்துக்கள் இல்லை! ராகுல் பேச்சால் அனல் பறந்த மக்களவை

இந்து மதம் அகிம்சையை போதிக்கிறது, வெறுப்பை விதைப்பவர்கள் இந்துக்கள் இல்லை- ராகுல் 





பணியக் கூடாது! சபாநாயகரை விமர்சித்த ராகுல்! அனல் பறந்த மக்களவை

பிரதமர் மோடிக்கு கை கொடுக்கும் போது, மட்டும் சபாநாயகர் தலைகுணிந்து வணக்கம் சொல்வது ஏன்? சபாநாயகர் பணியக் கூடாது என விமர்சித்த ராகுல் காந்தி 

பாஜக உறுப்பினர்களையே பயமுறுத்தும் விதமாக பிரதமர் மோடி இருக்கிறார் - ராகுல்

பாஜக உறுப்பினர்களையே பயமுறுத்தும் விதமாக பிரதமர் மோடி இருக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.



நீட் தேர்வால் கல்வியை வியாபாரமாக்கிவிட்டனர் - மக்களவையில் ராகுல் காந்தி அனல் பேச்சு
ராகுல் காந்தி தவறான தகவல்களை கூறுகிறார்! - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
அக்னி வீரர் திட்டத்தில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை - ராகுல் காந்தி

மக்களவை: அக்னி வீரர் திட்டத்தில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை  என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

கடவுளிடம் இருந்து தகவல் வந்ததா! பணமதிப்பிழப்பு குறித்து ராகுல் காந்தி கேள்வி?

கடவுளிடம் இருந்து தகவல் வந்ததா எனத் தெரியவில்லை, ஒருநாள் இரவு 8 மணிக்கு பணமதிப்பிழப்பை பிரதமர் அறிவித்தார் - ராகுல் காந்தி





வேளாண் திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கானது இல்லை, அம்பானிக்கானது - ராகுல் காந்தி

மக்களவை: வேளாண் திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கானது இல்லை, அம்பானி மற்றும் அதானிக்கானது என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். 

மத்திய அரசு கொள்கையால் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது - ராகுல் காந்தி

மக்களவை: மத்திய அரசு கொள்கையால் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். 

நாட்டின் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான முதுகெலும்பு உடைந்துவிட்டது - ராகுல் காந்தி

நாட்டின் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான முதுகெலும்பு உடைந்துவிட்டது என மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்தார். 

இந்தியா கூட்டணி குஜராத்தில் வெல்லும் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

இந்தியா கூட்டணி குஜராத்தில் வெல்லும்  என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

புதிய குற்றவியல் சட்டத்தின்படி சென்னையில் முதல் வழக்குப்பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின்படி சென்னையில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் தோட்டகலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்புக்கு அனுமதி தேவைப்படுபவர்கள் தோட்டகலை அலுவலகத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா - காங்கிரஸ் தலைவர் கார்கே இடையே வார்த்தை மோதல்

மாநிலங்களவையில் RSS குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் RSS உறுப்பினராக இருப்பது குற்றமல்ல எனவும் ஜெக்தீப் தன்கர் பதில். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா - காங்கிரஸ் தலைவர் கார்கே இடையே வார்த்தை மோதல்

Kalki Box office Collection : கல்கி 2898 AD : 4 நாட்களில் உலகம் முழுவதிலும் 555 கோடி வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தகவல்!

Kalki Box office Collection : கல்கி 2898 AD : 4 நாட்களில் உலகம் முழுவதிலும் 555 கோடி வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தகவல்!


 


நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதிலும் 555 கோடி வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தகவல்!

துரோகம் செய்வதை அண்ணாமலை நிறுத்த வேண்டும் - செல்வபெருந்தகை

“தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்வதை அண்ணாமலை நிறுத்த வேண்டும்” -தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கனமழை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்புப் படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!

நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு. சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று அனுமதி!

4 நாட்களாகச் சுற்றுலா பயணிகளுக்கு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று அனுமதி! கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாகக் கொட்டியதால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Train Accident Tiruppur: ரயில் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Train Accident Tiruppur: ரயில் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு


திருப்பூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ராஜ்குமார், சரவணன் ஆகியோர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்

Flights Cancelled : ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்தாகியுள்ளது. அவதிக்குள்ளான பயணிகள்

ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்தாகியுள்ளது. அவதிக்குள்ளான பயணிகள். டெல்லி, ஷீரடி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், நிர்வாக காரணங்களுக்காக ரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Parliament Protest - INDIA Alliance : இன்று காலை 10.30 மணிக்கு இண்டியா கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் போராட்டம்

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்றத்திற்கு வெளியே காலை 10.30 மணிக்கு இண்டியா கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர்

Mumbai Flood Shocking Video : காட்டாற்று வெள்ளத்தில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட சோகம்

புனே: லோனாவாலா பகுதியில் உள்ள பூஷி அணைக்கு அருகே உள்ள அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட சோகம். இறந்த 3 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2 சிறுவர்களின் உடலைத் தேடும் பணி தீவிரம்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ரோஹித் ஷர்மா.

National Doctors Day : இன்று தேசிய மருத்துவர்கள் தினம்

National Doctors Day : இன்று தேசிய மருத்துவர்கள் தினம். மருத்துவர்களின் சேவையையும், தன்னலமற்ற உழைப்பையும் போற்றுவோம்

Neet : கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு!

NEET Re-Exam Result: சர்ச்சைக்கு மத்தியில் நடைபெற்ற நீட் மறுதேர்வுக்கான,  முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Vegetable Price : சென்னை கோயம்பேடு மார்க்கெட்: காய்கறி விலை பட்டியல் - 01.07.2024

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 01.07.2024


வெங்காயம் 40/36/32
தக்காளி 45/40/30
நவீன் தக்காளி 60
உருளை  42/28/25 
சின்ன வெங்காயம் 80/75/70
ஊட்டி கேரட் 
60/50/48
பெங்களூர் கேரட் 30/20
பீன்ஸ் 120/90/
பீட்ரூட். ஊட்டி 70/65
கர்நாடக பீட்ரூட் 45/40
சவ் சவ் 50/40
முள்ளங்கி 30/28
முட்டை கோஸ் 38/36
வெண்டைக்காய் 40/30
உஜாலா கத்திரிக்காய்
37/35
வரி கத்திரி /30/25
காராமணி 60/50
பாவக்காய் 50/40
புடலங்காய் 35/25
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 68/65
முருங்ககாய் 90/70
சேமகிழங்கு 50/40
காலிபிளவர் 50/40
வெள்ளரிக்காய் 20/15
பச்சை மிளகாய் 50/40
பட்டாணி 220/200
இஞ்சி 150/130/120
பூண்டு 330/250/160
அவரைக்காய் 80/70
மஞ்சள் பூசணி 18/15
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 90/80
நூக்கள் 35/30
கோவைக்காய் 30/20
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 30/24
வாழைப்பூ 25/20
குடைமிளகாய் 50/40
வண்ண குடமிளகாய் 180
கொத்தமல்லி 6
புதினா .2
கருவேப்பிலை 25
கீரை வகைகள் 7
மாங்காய் 40/35
 தேங்காய் 28/26

New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?

New Criminal Laws: வரலாற்று நடவடிக்கையாக நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.


அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்:


ஒரு முக்கிய நடவடிக்கையாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை காலனித்துவ கால சட்டங்களை மாற்றியமைத்து, குற்றவியல் நீதி அமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை ஏற்படுத்துகின்றன. பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகியவை முறையே இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை, அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்கள் ஆகும்.

காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Gas Cylinder Price: வியாபாரிகளை மகிழ்ச்சி அடைய செய்யும் விதமாக தொடர்ந்து நான்காவது மாதமாக, வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


அத்னப்டி, சென்னையில் வணிக சிலிண்டருக்கான  விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது கேஸ் சிலிண்டர் விலை 1809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


 

இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா. சம்பந்தன் காலமமானார். அவருக்கு வயது 91. கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வர், சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண சம்பந்தன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 

Background


  • நாடு முழுவதும் நள்ளிரவு முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன - காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமே புகாரளிக்கும் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன

  • சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டு 1809.50 ரூபாய்க்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது - தொடர்ந்து நான்காவது மாதமாக விலை குறைக்கப்பட்டு இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு - மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

  • தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவுகள் - தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

  • திருவண்ணாமலையை சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது 

  • 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பம்: விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாள்

  • குஜராத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு - தனியார் பள்ளி உரிமையாளர் கைது 

  • இலங்கை தமிழ் அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் தனது 91வது வயதில் காலமானார் - கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  • ஐசிசியின் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு

  • சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஜடேஜா அறிவிப்பு - டி20 உலகக் கோப்பையை வென்றதை தொடர்ந்து முடிவு

  •  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.