அரியர் தேர்வுகளுக்காக கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்ற முந்தைய தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இந்த புதிய தகவலை தெரிவித்துள்ளது.




ஆன்லைனில் நடத்தப்படும் அரியர் தேர்வுகளுக்கான தேதிகள் யூஜிசி-யுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்ற தமிழக அரசின் உறுதியை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தேர்வுகளை 8 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், தேர்வு நடத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை ஜூலை 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


இதனால், அரியர் தேர்வுகளை எழுதாமலேயே ஆல்க்ளியர் ஆகிவிடலாம் என்ற மாணவர்களின் கனவுகள் கலையும் நிலை ஏற்பட்டுள்ளது.