சென்னையில் இன்று பெட்ரோல் 92.43 ரூபாய் எனவும், டீசல் 26 காசுகள் குறைந்து 85.75 ரூபாய் எனவும் விற்பனையாகிறது. சென்னையில் சமையல் எரிவாயு விலை 825 ரூபாய் என்றளவில்  விற்பனையாகிறது. சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையை சார்ந்தது.  மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படும் மானியம் சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கத்தை பொருத்தும், அரசின் முடிவின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 2010 ஜூன் 26 மற்றும் 2014 அக்டோபர் 19 முதல் சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று அரசு முடிவு செய்தது. அது முதல், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகள் மற்றும் இதர விஷயங்களைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.