தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Continues below advertisement




 


அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் சிலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. திமுக எம்பி கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I have tested positive for COVID &amp; hospitalised! <br><br>I sincerely request everyone who have been around me lately to watch out for any symptoms &amp; get tested.</p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a >April 11, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


 


இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவரும், அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த அண்ணாமலை, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.