கேரள மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பினராய் விஜயன் தலைமையிலான அரசு ஆட்சியமைக்க உள்ளது. இதில் மொத்தம் 21 அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை எல்டிஎப் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்கவராக இருந்தவர் கே.கே சைலஜா டீச்சர். அவர் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய நபர்களை பொறுப்புகளில் நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது. அந்தவகையில் சைலஜா டீச்சர் மீண்டும் அமைச்சரவையில் பொறுப்பேற்க மாட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.






அந்த வகையில் மாஸ்டர் புகழ் மலையாள நடிகை மாளவிகா மோகனன் " இதுவரை இருந்ததிலேயே மிகச்சிறந்த சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். பெருந்தொற்று காலத்தில் என்ன நடக்கிறது பினராய் விஜயன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்...






மற்றொரு மலையாள நடிகையான பார்வதி சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகிறார், தனது ட்விட்டர் பக்கத்தில் "சைலஜா டீச்சர் அமைச்சரவையில் இருக்க தகுதியானவர், கேரள மக்களுக்கு அவருடைய தலைமை தேவை" என குறிப்பிட்டுள்ளார்...






மேலும் "மிக இக்கட்டான காலகட்டத்தில் மாநிலத்தை வழிநடத்தியவர் சைலஜா" நடிகை பார்வதி சரமாரி ட்விட்ஸ்..






"கொண்டு வாருங்கள் மீண்டும் சைலஜா டீச்சரை" நடிகை பார்வதி முழக்கம், #bringourteacherback என்னும் ஹாஷ்டேக்  தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில்...






இந்திய தேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர் "அமைச்சரவையிலிருந்து சைலஜா டீச்சர் விலகுவது வருத்தம் அளிக்கிறது, அவருடைய வழக்கமான செயல்த்திறன் மட்டுமின்றி அனைத்து தருணங்களிலும் மிக உதவியாக இருந்தவர். குறிப்பாக கொரோனா காலங்களில் அவரை நிச்சயம் மிஸ் செய்வோம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது மூலம், எதிர் கட்சிகளிலிருந்தும் இவருக்கான ஆதரவு குரல்கள் எழுகின்றன.