கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

  


1. நேற்று மாலை சென்னை மேட்டுக்குப்பம் மயானத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. 78 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது


2. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


3. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-வுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 



நடிகர் விவேக்


 


4. நேற்று இரவு கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கான மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்நோயின் தாக்கம் வெற்றிகரமாக தடுக்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.   


5. ரயில்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணியாமல் நுழைபவர்களுக்கு  குறைந்தது ரூ.500 அபராதமாக  விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்தது. தனிமனித சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ரயில் நிலைய அலுவலர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.




 


6. கும்பமேளாவை அடையாளமாக நடத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"இரண்டு ஷாகி ஸ்நானங்கள் (ராஜ குளியல்) நடைபெற்று முடிந்திருப்பதால், கும்பமேளாவை அடையாளமாக நடத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று, ஸ்நானத்தில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரவேண்டாம் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் மகாமண்டலேஸ்வர் பூஜ்யா சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜி கேட்டுக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டது.


7. சென்னை வேளச்சேரிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் நேற்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. இதில்,  34 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். அதாவது, மொத்தமுள்ள 548 வாக்காளா்களில் 186 போ் வாக்களித்தாக தெரிவிக்கப்பட்டது.


8. பிரபல இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி காலை கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். கவலைப்பட வேண்டாம். இது உங்களின் பிரச்சினைகளை தீர்க்க எனக்கு போதுமான நேரம் தருகிறது. உங்களுடன்தான் நான் எப்போதும் இருக்கிறேன் என நினைவில் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டார். 


9. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்  9,344 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1657 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 


10. இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு விசா வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.