கரூர் பகுதியில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.


 




கரூர் மாவட்டம் புகழூர் பகுதியில்  வைக்கோல் ஏற்றி வந்த லாரி  மின் கம்பியின் மீது உரசியதில் வைக்கோல் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர்  விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


 





மன்னார்குடியை சார்ந்த பக்கிரிசாமி என்பவர்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து விற்பனைக்காக வைக்கோல் ஏற்றி வந்துள்ளார். கரூர் மாவட்டம்  புகழூர் பகுதியில் வைக்கோல் இறக்கி விட,   தவுட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக  மின் கம்பி மீது உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவல் தெரிவித்துள்ளனர்.


 




அங்கு வந்த புகழூர் தீயணைப்பு நிலைய வாகனம், தமிழ்நாடு காகித ஆலை தீயணைப்பு நிலைய, கரூர் தீயணைப்பு நிலைய என 3 வாகனங்கள் மூலம் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உள்ளிட்ட யாருக்கும் எந்த காயமும் இல்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.