பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசிலில் பரவி வரும் புதிய வகைக் கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 என உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவிட் 19 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகக் கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச நாடுகள் 2021 தொடக்கம் முதல் அறிவித்து வந்த நிலையில்தான் பிரிட்டனில் கொரோனாவின் B 1.1.7 வகைப் பரவியது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து அதன் அடுத்த பரிணாமமான B 1.351 தென் ஆப்ரிக்காவிலும் P.1 வகை பிரேசிலிலும் பரவியதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். வெவ்வேறு சூழலுக்கு ஏற்ப கொரோனா வைரஸ் தன்னைத் தகவமைத்துக் கொள்வதுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. பிரிட்டனில் பரவி வந்த கொரோனா வைரஸ் வகை அமெரிக்காவிலும் பரவ வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில்தான் இந்தியாவில் அது பரவியதற்கான தடயங்கள் உறுதிசெய்யப்பட்டன.






அடுத்த பரிணாமமான B 1.351 தென் ஆப்ரிக்காவிலும் P.1 வகை பிரேசிலிலும் பரவியதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர்


கோவிட்-19 போன்று அதிகவேகப் பரவும் தன்மை அதற்கு இல்லையென்றாலும் இதில் இறப்பு எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்பட்டது.  இந்த நிலையில்தான் தற்போது கொரோனாவின் B 1.1.7 வகை பாதிப்பு இந்தியாவில் அதிகரித்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை குறித்து நாடு அச்சத்தில் இருக்கும் நிலையில் இந்தப் புதிய வகைக் கொரோனா பாதிப்பு மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.




இந்த வகைக்கு எதிராகத் தனியாக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளே இதற்கு எதிராகவும் செயல்படுகிறது என்று சொல்லப்பட்டு வருவதால் உலகநாடுகளும் அதையே தற்போது பரிணாம வளர்ச்சி அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிரான சிகிச்சையாக அளித்துவருகின்றன.