தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement


இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மூத்த இசையமைப்பாளர் தேவா குரலில் உருவாகி இணையத்தில் வெளியான "பண்டாரத்தி புராணம்" என்ற பாடலை அப்படத்தில் இருந்தும் இணையத்தில் இருந்தும் நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




அந்த பாடலில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்துவது போல அமைந்துள்ளதாக அந்த குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலால் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. Post Production பணிகள் நடந்து வரும் நிலையில் ஏப்ரல் மாதம் 9ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
  
கர்ணன் படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த வழக்கு பதிவு பலருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.