வெகு நாட்களுக்குப் பிறகு மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியாகி  இருக்கும் திரைப்படம் பத்மினி. பத்மினி என்றால் ஏதோ  நடிகையின் சுயசரிதை என்று நினைத்துவிட வேண்டாம். இந்த பெயருக்கு ஒடு பெரிய ஃபிளாஷ்பேக் இருக்கிறது. பத்மினி படத்தின் விமர்சனம் இதோ…


 


பத்மினி




சென்ன ஹெட்ஜ் இயக்கத்தில் மடோனா செபாஸ்டியன், குஞ்சகோ போபன், அபர்னா பாலமுரளி, சஜின் செருகயில் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளப் படம் பத்மினி. சுவின் கே வர்கி. பிரசோப் கிருஷ்ணா, அபிலாஷ் ஜார்ஜ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். செண்ட்ரல் பிக்சர்ஸ் இந்தப் படத்தை விநியோகிஸ்துள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேது திரையரங்குகளில் வெளியாக இந்தப்  படம் கடந்த ஆக்ஸ்ட் மாதம் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.


ஓபன் பன்னா


ரமேஷன் என்கிற ஒரு கல்லூரி ஆசிரியர் மற்றும் பகுதி நேரம் கவிஞர். ரமேஷனுக்கு இன்னொரு பெயரும் ஊருக்குள் இருக்கிறது. பத்மினி ரமேஷன். ஏன் இவரை பத்மினி என்று அழைக்கிறார்கள் தெரியுமா. ஊர்முன் சிறப்பாக நடந்த இவரது கல்யாணம் நிகழ்ந்து  தனது முதலிரவில் இவரை நைஸாக பேசி சைஸாக வெளியேக் கூட்டிச் சென்று தனது காதலனுடன் பழைய பத்மினி காரில் தனது காதலனுடன் ஓடிப்போகிறார் அவரது புது மனைவி. தனது மனைவியை பத்மினியில் ஓடவிட்டவர் என்பதால் பத்மினி ரமேஷன் என்கிற பட்டபெயர் இவருக்கு அடையாளமாகி விடுகிறது. ஒரே நாளில் முடிந்த தனது திருமணத்தை நினைத்து சோகத்தில் தாடி வளர்த்துக் கொண்டு எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறார் ரமேஷன் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?  அப்படி எல்லாம் இல்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்து விட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் தான் இருக்கிறார் நாயகன். இப்படியான நேரத்தில் தான் ரமேஷன் வேலை பார்க்கும் அதே கல்லூரியில் வேலைக்கு சேர்கிறார் பத்மினி ( மடோனா செபாஸ்டியன்). தனது பத்மினி ரமேஷன் பத்மினியின் மேல் காதல் கொள்கிறார். தனது பட்டப் பெயருக்கும் ஒரு புது அடையாளம் கிடைத்துவிட்டதாக சமாதானம் அடைகிறார்.


வருகிறார் சனி பகவான்


ஆனால் பத்மினியை திருமணம் செய்துகொள்ள அவர் முதலில் தனது முதல் கல்யாணத்தில் இருந்து விவாகரத்துப் பெற வேண்டும். அதற்கு அவர் ஓடிப்போன முதல் மனைவியை கண்டுபிடிக்க வேண்டும். அவரை அவர் கண்டுபிடித்து பத்மினியுடன் சேர்ந்தாரா . அப்படியே சேர்ந்தார் என்றாலும் எந்த பத்மினியுடன் சேர்ந்தார் என்பதே மீதிக்கதை


துணைக்கதாபாத்திரங்கள்


ரமேஷன் பத்மினியைத் தவிர்த்து படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் என்றால் ஸ்ரீதேவி (அபர்னா பாலமுரளி) . மற்றும் ஜயன் கதாபாத்திரங்கள் (சஜின் செருகயில்). இந்த இரண்டு கதாபாத்திரங்களின் மூலமாக ரசிக்கும் வகையிலான  நகைச்சுவைக் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.


நம்பி பார்க்கலாமா


ஒரு மிதமான நகைச்சுவையான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த தயக்கும் இல்லாமல் படத்தை பார்க்க முயற்சிக்கலாம். பெரிய அளவிலான ட்விஸ்டோ ஆக்‌ஷனோ உணர்ச்சிகரமான காட்சிகளோ ஏதும் படத்தில் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு மடோனா செபாஸ்டியனை வியந்து பார்க்கும் அளவிற்கு எல்லாம் நடிப்பிற்கான இடங்கள் அவருக்கு படத்தில் இல்லை. இரண்டு மணி நேரம் பொழுதுபோக வேண்டும் என்றால் பத்மினி படத்தை  நம்பி தேர்வு செய்யலாம்.