விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளுக்கு வருகிறார்கள். பாக்கியா "இன்னிக்கு உங்களுக்கு சாம்பார் சட்னி எல்லாம் கிடையாது. நான் அனைவருக்கும் ஸ்பெஷலாக ஒன்று செய்து வைத்துள்ளேன். பாறை மீன் குழம்பு" என காட்டியதும் அனைவர் வாயிலும் எச்சில் ஊறுகிறது.
ஈஸ்வரிக்கும் மீன் குழம்பை பார்த்ததும் சற்று சலனம் ஏற்படுகிறது. இருந்தாலும் அதை எல்லாம் ஜபித்துக்கொண்டு அடக்கி கொள்கிறார். "அத்தை நான் உங்களுக்காக தேங்காய் சட்னி அரைத்து வைத்துள்ளேன்" என கூறுகிறாள் பாக்கியா.
வீட்டில் உள்ள அனைவரும் மீனை உறிஞ்சி சாப்பிடுவதை பார்த்து ஈஸ்வரிக்கு வாய் ஊறுகிறது. ஆஹா ஓஹோ என சொல்லி வெறுப்பேத்துகிறார்கள். "இன்னிக்கு தான் கடைசி நாள் இனிமேல் இந்த வீட்டில் அசைவம் சமைக்கவும் கூடாது யாரும் சாப்பிடவும் கூடாது. நான் ஹாலுக்கு போய் சாப்பிடுகிறேன்" என சென்று விடுகிறார்.
அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்றதும் நைஸாக சமையல் அறைக்கு சென்று மீன் குழம்பை டேஸ்ட் பார்த்து "என்ன ஒரு ருசி..." என கண்களை மூடி கொண்டு ரசிக்கிறார். அதை வீட்டில் இருக்கும் அனைவரும் பின்னால் இருந்து பார்த்து விடுகிறார்கள். அவர்களை பார்த்ததும் ஈஸ்வரி எதையோ சொல்லி மழுப்புகிறார். "நாங்கதான் நீங்க நக்கி பார்த்ததை பார்த்துவிட்டோம்" என சொன்னதும் எஸ்கேப்பாகி விடுகிறார் ஈஸ்வரி.
அடுத்த நாள் காலை பாக்கியா எல்லா வேலைகளையும் சீக்கிரம் செய்து முடித்து விடுகிறாள். ஈஸ்வரி "நீயா தனியா எல்லா வேலையும் ஏன் செய்யுற?" என கோபித்து கொள்கிறார். செல்வி பொறுமையாக வர அவளையும் ஈஸ்வரி திட்டுகிறார். எழிலும் அமிர்தாவும் வந்து நிலாவுக்கு ராத்திரி எல்லாம் ஒரே காய்ச்சல் என்கிறார்கள். அமிர்தாவை கேன்டீனுக்கு வர வேண்டாம் என சொல்லிவிடுகிறாள் பாக்கியா. "நானும் செல்வியும் அதை பாத்துக்குறோம் நீ கவலை படாத. வீட்டில் இருந்து நிலாவையும் வீட்டு வேலைகளையும் பார்த்து கொள்" என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
கேன்டீன் சென்ற பாக்கியா அனைத்து உணவுகளையும் டேஸ்ட் பார்க்கிறாள். என்னவோ இன்னிக்கு ரொம்ப பதற்றமாக இருக்கிறது என செல்வியிடம் சொல்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நிறைவு பெற்றது.