ஒரு நாள், ஒரு கொலை, ஒரு காணாமல் போன வழக்கு மற்றும் விபத்து வழக்கு ஆகியவை ஒரே நாளில் நடக்கும் இன்ஸ்பெக்டர் விக்ரம் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் விசாரிக்கத் தொடங்குகிறார், எந்த ஆதாரமும் இல்லாமல் துப்பு துலங்குகிறார். அடுத்து என்ன நடக்கும்? அவர் மர்மத்தைத் தீர்த்து தனது பணியில் வெற்றி பெறுகிறாரா ?
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் நடிகர் ப்ரஜன் மற்றும் நடிகை பிரதீப் வித்யா நடித்துள்ளார் படத்தில் பிரஜினின் நண்பராக ராகுல் மாதவ் நடித்துள்ளார், மற்ற நடிகர்களான சார்லி, காயத்ரி யுவராஜ், அபிஷேக் ஆகியோர் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கதையின் கரு:
குற்றாலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக விக்ரம்(ப்ரஜின்) இருக்கிறார் அவர் சந்திக்கும் வழக்கு அனைத்திலும் ஒரு விஷயம் ஒத்துப்போகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சில வாக்குமூலத்தின் அடிப்படையில் சாலையில் தனியாக ரோட்டிற்கு நடந்து செல்லும் போது கனரக வாகனம் அவர்கள் மேல் மோதுகிறது. மேலும் வழக்குகளுக்கு இடையிலான ஒற்றுமை அவரை சில வழிகளுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அனைவரும் கூறும் ஒரே பதில் 'ஃபோன் வந்தது சார்.. ஒரு மாதிரி போனாங்க' இந்த வாக்கியம் கதாநாயத்திற்கு திரும்பத் திரும்ப மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. விசாரணை தொடரும்போது, விபத்துகள் என்ற பெயரில் மூடப்பட்ட 213 வழக்குகள் ஒரே நிலையத்தில் இருப்பதை விக்ரம் கண்டுபிடிக்கிறார்.
இந்த வழக்கு தனது உயிருக்கு மட்டுமல்ல,அவரது மனைவி மாயாவின் (வித்யா பிரதீப்) உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணரவில்லை. வில்லன் கூட்டத்தால் விக்ரம் மனைவி கொல்லப்படுகிறார்
சற்று தொய்வான திரைக்கதை:
இரண்டாம் பாதியில் டி3 ஸ்டேஷனில் கேஸ் சுவாரஸ்யமாக இருந்தாலும். சில நிமிடங்களில் ப்ரஜின்(விக்ரம்) அவரைச் சுற்றி நடக்கும் சதிகளை மெதுவாய் கண்டறிகிறார். இந்த குற்றங்களுக்கு பின்னணியில் உள்ள நபர் யார்? தான் தொடங்கியுள்ள வழக்கு விசாரணைகளில் போடப்பட்டுள்ள முடிச்சுகளை ஹீரோ அவிழ்த்தாரா? போன்ற எதிர்பார்ப்புகளுடன் தொடர்கிறது திரைக்கதை.
இயக்குநர், படத்தின் ஆரம்பத்திலிருந்து குற்றவாளி யார் என்று தெரியாத மாதிரி கதையை நகர்த்துகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தாலும், போகப்போக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தொய்வு ஏற்படுகிறது. மணிகண்டன் பி.கே.யின் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித்தின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ப்ரஜின் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு போலீஸ் வேடம் கச்சிதமாக பொருந்தியுள்ளது. மேலும், அவருடைய ஸ்க்ரீன் பிரஸன்சும் நன்றாக இருக்கிறது. ஹீரோவிற்கு தேவையான எதிர்பார்ப்பை நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறார் பிரஜின்.
இடைவேளைக்கு முந்தைய காட்சியில் பாடலை தவிர்த்திருக்கலாம். படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் திரில்லர் படத்திற்கு ஏற்ற விதமாய் அமையவில்லை. சற்று தொய்வான கதையாக இருந்தாலும், சுவாரஸ்யமான ஒன்-லைன் ஸ்டோரியுடன் படம் பார்ப்பவர்களை 2 மணிநேரத்திற்கு இருக்கையிலேயே அமர வைக்கிறது டி3. ஆனால் ஒரு புலனாய்வு திரில்லரில் இருந்து ஒருவர் எதிர்பார்க்கும் அந்த அதிவேக அனுபவத்தைக் கொடுக்க இப்படம் போராடியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. மொத்தத்தில் படத்தில் வரும் டயலாக் போலவே படமும் 'ஒரு மாதிரி இருக்கு'