ஆரோக்யமான செக்ஸ் வாழ்க்கை மிக அவசியமான ஒன்று, எப்போது வேண்டும், எப்போது வேண்டாம் என்பதை புரிந்து நடப்பதில் உள்ளது. மன அல்லது உடல் ரீதியான காரணங்களுக்காக இருந்தாலும், உங்கள் நலனையும் உங்கள் துணையின் நலனையும் மோசமாகப் பாதிக்குமானால், அதனை தவிர்க்க வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதிக உணர்வோடு இருந்தாலும், சில நேரங்களில் உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்ல நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நிர்ப்பந்தத்தின் காரணமாக செய்தால் அது ஒருவரை குற்ற உணர்வுக்கும், அந்த முடிவை நினைத்து வருந்துவதற்கும் தள்ளுகிறது. ஆக எப்போதெல்லாம் செக்ஸை தவிர்க்க வேண்டும் என்ற விபரங்கள் கீழே!


UTI தொற்றில் இருந்து மீளும்போது


சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) சிறுநீர் அமைப்பின் எந்தப் பகுதியிலும் உருவாகிறது, மேலும் எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்துகிறது. UTI களுக்கான சிகிச்சையின் போது, ஒருவர் உடலுறவைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது நிலைமையை மேலும் மோசமாக்கும். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உடலுறவை அனுபவிக்க ஒருவர் முழுமையாக குணமடைந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.



கருத்து வேறுபாட்டின்போது


சில முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது கடினம், ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க உடலுறவை மருந்தாக பயன்படுத்துவது தவறு. ஆறுதல் நிலை எப்போதும் மிகுந்த முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் மற்றும் பேச்சுவார்த்தை, சமாதானம், மற்றும் அமைதியான தலையீடுகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். இணையருக்குள் சரியான புரிதல் இருக்கும்போது உடலுறவு மேற்கொள்வதே சிறந்தது.


தொடர்புடைய செய்திகள்: TN Rain: தீவிரத்தை தக்கவைத்துள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழ்நாட்டில் மழை எப்போ? எப்படி?


வேக்சிங் செய்த பிறகு


வேக்சிங் செய்த பிறகு உடலில் உள்ள பகுதிகளில் உணர்திறன் அதிகமாக இருக்கும். ஏற்கனவே உணர்திறன் அதிகமாவே உள்ள பகுதிகளில் தொற்று மற்றும் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. வேக்சிங் செய்த பிறகு ஓரிரு நாட்கள், துணையுடன் உடல் ரீதியாக நெருங்கிப் பழகாமல் காத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது வேக்சிங் செய்த பிறகு ஒருவரை முழுமையாக குணப்படுத்த அனுமதித்து பிறகு உடலுறவு கொள்வது நல்லது. 



ஈஸ்ட் தொற்று


ஈஸ்ட் தொற்று என்பது யோனியில் ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்று மற்றும் கடுமையான அரிப்பு, எரிச்சல் மற்றும் வெளியேற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த தொற்று பரவக்கூடியது, எனவே உங்கள் துணையிடம் இருந்து உங்களுக்கோ, உங்களிடம் இருந்து துணைக்கோ பரவ வாய்ப்பு உள்ளது.


பாதுகாப்பு இல்லாமல்


பாதுகாப்பற்ற உடலுறவு ஒருவருக்கு STD களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் தேவையற்ற கர்ப்பத்தின் அபாயத்தையும் உள்ளடக்கியது. எனவே ஆணுறை பயன்படுத்தும் பாலியல் உறவு சிறந்தது.


ட்ரக்ஸ், மது எடுத்துக்கொண்ட பிறகு


உங்கள் மூளையை போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் குழப்புகிறது. போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போது உடலுறவு தவிர்க்கப்பட வேண்டும். அது ஒரு நிலையான முழுமையான உடலுறவை அனுபவிக்க அனுமதிக்காது.