Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 152.06 அல்லது  0.25 % புள்ளிகள் குறைந்து 60,689.82 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 53.85 அல்லது 0.30% புள்ளிகள் குறைந்து 17,800.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டளார்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்துள்ளது.


லாபம்-நஷ்டம்


ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, ஹிரோ மோட்டோகோர்ப், பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ, பாரதி எர்டெல், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, லார்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டாடா ஸ்டீல், ஹின்டல்கோ, இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக் மகேந்திரா, அப்போலோ மருத்துவமனை, ஏசியன் பையின்ட்ஸ், கோடன் மகேந்திரா, சன் பார்மா, சிப்ளா, கோல் இந்தியா, கிராசிம், மாருதி சுசிகி, ஓஎன்ஜிசி, கிராசிம், என்டிபிசி, லார்சன், பிரிட்டானியா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


என்ன காரணம்?


கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தையானது நல்ல நிலையில் இருந்தது. பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக இருந்தது. 


இந்நிலையில், கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச வளர்ச்சி, சீனாவில் கொரோனா தாக்கம் என பல காரணிகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்று நாணய கொள்கை கூட்டம்:


இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்தியா நாட்டிலுள்ள வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், நாட்டிலுள்ள பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது. மேலும், நாட்டில் விலைவாசி உயர்ந்தால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகவும் விளங்குகிறது.


ஆகையால், நாட்டின் பணவீக்கத்தை அடிக்கடி ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நாணய கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம், அல்லது ஆண்டுக்கு 4 முறையாவது கூட வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில் பணவீக்கம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இன்று முதல் 3 நாட்கள் ( பிப்.6 முதல் பிப். 8 ) இக்கூட்டம் நடைபெறுகிறது.


இன்று தொடங்கும் கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 அடிப்படை புள்ளிகள்  உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள், வங்கியில் வீட்டு கடன் , வாகன கடன் வாங்கியோருக்கு இ.எம்.ஐ செலுத்தும் தொகையானது அதிகரிக்க கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.


பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பங்குச் சந்தை சரிவிடன் தொடங்கியுள்ளது.


ரூபாயின் மதிப்பு:


 




அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 காசுகள் குறைந்து  82.43 ரூபாயாக உள்ளது.