உலக ஆற்றல் பாதுகாப்பு தினம் டிசம்பர் 14 அன்று உலகம் முழுவதும் அணுசரிக்கப்படுகிறது. இந்த நாள் எரிசக்தி வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எரிசக்தி ஆற்றலைப் பாதுகாப்பது ஆரோக்கியமான, நிலையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய முதல் படியாகும், மேலும் இந்த நாளில் அரசாங்கம், வணிகங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.


குடிமக்களாகிய நமது வீட்டிலிருந்து தொடங்கி எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதும் நமது பொறுப்பு. உலக எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு தினமான 2022 அன்று, மின் நுகர்வைக் குறைப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.




LED மற்றும் சாதாரண பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல், பணம் மற்றும் எரிசக்தி ஆகிய மூன்று வகைகளிலும் நம்மால் சேமிக்க முடியும். வழக்கமான காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் லைட் (CFL) அல்லது ஒளிரும் பல்புகளை விட அதிக ஒளியை உற்பத்தி செய்யும் போது LED கள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.


பகலில் உங்கள் விளக்குகளை அணைத்து வைப்பதன் மூலம் உங்களால் முடிந்தவரை இயற்கை ஒளியைப் பயன்படுத்த முடியும். இதன் காரணமாக இது மின் அமைப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, காலப்போக்கில் குறிப்பிடத்தக்க தொகையை உங்களால் சேமிக்க முடியும். 


முடிந்தவரை எரிசக்தி ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தவும். 
வீட்டுக்கான சாதனங்களை வாங்க முடிவெடுக்கும் போது எனர்ஜி ஸ்டார் மதிப்பீட்டில் அதிக மதிப்பீடு உள்ள மின் சாதனங்களைத் தேர்ந்தெடுக்கவும். எனர்ஜி ஸ்டார் அதிக மதிப்பீட்டைக் கொண்ட சாதனங்கள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன மற்றும் குறைந்த செலவில் செயல்படும். இதைப் பெறுவதற்கான செலவு ஆரம்பத்தில் உங்களுக்கு அதிகம் என்றாலும் நீண்ட காலத்துக்கு அவை உங்களுக்கு அதிக பணத்தை மிச்சப்படுத்தும்.