இன்று உலக ரத்த தான நாள் (World Blood Donor Day). இரத்த தானம் செய்தன் அவசியம், பாதுகாப்பான ரத்தம் கொடுப்பது, அதனால் காப்பாற்றப்படும் உயிர்களின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக ரத்த தான தின வரலாறு:
2004-ம் ஆண்டு முதல் ரத்ததான தினம் கொண்டாப்பட்டு வருகிறது. 2005 ம் ஆண்டு உலக சுகாதார சபையில் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தினத்தை உலக அளவில் கடைப்பிடிக்க அனைத்து உறுப்பினர்களும் சம்மதித்து முடிவெடுத்தனர். அறிவியலும் தொழில்நுட்பம் வளர தொடங்கியத்தில் இருந்து மருத்துவ உலகில் பல்வேறு புதுமைகள் ஏற்பட்டுள்ளது. அவை மனித உயிர்களைக் காப்பத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன. அப்படி, நவீன ரத்த மாற்று நடைமுறைகளின் தந்தை என்று அழைப்படுபவர் ஆஸ்திரிய உயிரியலாளர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner). இவருடைய அய்வுகள் அறிவியலுக்கு மிகவும் முக்கியமான பங்களிப்பை தந்துள்ளன.
மனிதர்களின் ரத்தத்தை ஏ,பி. ஏபி, ஓ என முதன்முதலில் வகைப்படுத்தியவர் இவரது ஆராய்ச்சிகள்தான். ரத்த வகை பிரிவுகளை உருவாக்கியதற்காக 1930-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடைய பிறந்தநளான ஜூன் 14-ல் உலக ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கருப்பொருள்:
இந்தாண்டிற்கான கருப்பொருள் '20 years of celebrating giving: thank you blood donors!'. ஆம். இந்த தினம் கடைப்பிடிக்க தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் நோக்கில் ரத்த கொடையாளர்களை அங்கீகரித்து பாராட்டும்விதமாக கருப்பொருள் அமைந்துள்ளது. ரத்ததானம் செய்பவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் கருப்பொருள் அமைந்துள்ளது.
யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?
- இரத்த தானம் செய்ய உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமான அளவில் ரத்த அளவு உள்ள எந்தவொரு ஆணும் பெண்ணும் ரத்ததானம் செய்யலாம்.
- இருப்பினும், ரத்தம் தானம் செய்ய சில வழிகாட்டுதல் நடைமுறைகளை தேசிய ரத்த மாற்று கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அதன்படி,
- ரத்த தானம் செய்ய 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 65 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறையுன் பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம்.
- ரத்த தானம் செய்ய 50 கிலோ உடல் எடை இருக்க வேண்டும். 45-க்கு குறைவாக உடல் எடை இருக்கக் கூடாது.
- ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் (12.5 g/dl)அல்லது அதற்கு மேல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- இரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும். ரத்தம் கொடுக்கும்போது இது கண்காணிக்கப்படும். ரத்த அழுத்த அளவில் மாறுபாடு இருந்தால் தானம் செய்ய மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
யாரெல்லாம் ரத்த தானம் செய்ய கூடாது?
- கருவுற்ற பெண்கள்; பாலூட்டும் தாய்மார்கள் ரத்த தானம் செய்ய கூடாது.
- டாட்டூ அல்லது உடலில் பியர்சிங் (body piercing) செய்த 6 மாதங்களுக்குள் ரத்த தானம் கொடுக்க கூடாது.
- ரத்த தானம் கொடுப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு, மது,போதை மருத்து பயன்படுத்தியிருந்தால் தானம் கொடுக்க கூடாது.
- உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.
- எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
- காலரா, டைபாய்டு, ப்ளேக் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 15 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது. அதேபோல, ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் ஓராண்டுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது.
- புற்றுநோய் பாதிப்பு, இதய நோய் உள்ளவர்கள் ரத்த தானம் கொடுக்க கூடாது.