‛என்ன ஒரு ரசனை...’ குலாப் ஜாமுனுக்கு’ ஓல்ட் மாங்க்’ தடுப்பூசி! வைரல் வீடியோ!

ஒருவர் குலாப் ஜாமுன் உடன் மதுவை கலக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி உள்ளது.

Continues below advertisement

குலாப் ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்புகளில் ஒன்று. குறிப்பாக நம்முடைய வீட்டில் பண்டிகை நாட்களில் பெரும்பாலும் சக்கர பொங்களுக்கு அடுத்தப்படியாக அதிக பேர் செய்யும் இனிப்பு என்றால் அது குலாப் ஜாமுன் தான். இந்த இனிப்பு வகையில் பொதுவாக ஜீரா சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக ஒருவர் சாப்பிடும் குலாப் ஜாமுன் வகை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் குலாப் ஜாமுன் இனிப்புகளுடன் ஜீராவிற்கு பதிலாக ஓல்ட் மாங்க் மது பானத்தை ஒரு ஊசியை வைத்து போடும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு பின்னால் புத்தி உள்ள மனிதர் எல்லாம் என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ முகநூல் பக்கத்தில் கடந்த மாதம் பதிவிடப்பட்டது. தற்போது வரை இந்த வீடியோவை பலரும் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் பகிர்ந்துள்ளனர். சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். இந்த வீடியோவில் அந்த நபர் ஊசி வைத்து மதுவை செலுத்துவது தொடர்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. 

சமீப காலங்களாக இதுபோன்று உணவு பொருட்களுடன் மதுவை கலந்து குடிப்பது வாடிக்கையாகி வருகிறது. முன்பு எல்லாம் குளிர்பானங்கள் மற்றும் இளநீர் ஆகியவற்றில் மதுவை கலந்து குடித்து வருவதை மது குடிப்போர் செய்து வந்தனர். தற்போது அதில் இருந்து மாறி உணவு பொருட்களுடன் மதுவை கலந்து குடிக்க தொடங்கியுள்ளனர்.  மதுப்பழக்கம் எப்போதும் நமது உடலுக்கு மிகவும் தீங்கான ஒன்று. இதுபோன்று உணவு பொருட்களில் மதுவை கலந்து குடிப்பதை நாம் நிச்சயம் கைவிட வேண்டும். இதனால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்பட கூடம். இந்த உணவு பண்டங்களை சிறுவர்கள் கூட சாப்பிட கூடும். அவர்களுக்கு இது பெரும் தீங்கை விளைவிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இது போன்ற செயல்களை நாம் தவிர்க்க வேண்டும். 

மேலும் இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் அது மற்றவர்களுக்கு ஒரு யோசனையாக இல்லாமல் இருக்கும். குடிப்பழக்கம் எப்போதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே குடிப்பழக்கத்தை முடிந்த வரை கைவிட்டு வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வோம் என்ற உறுதியை எடுப்போம். அதுவே நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது. எனவே நாம் குடிப்பழக்கத்தையும் அதை ஊக்குவிக்கும் அனைத்து நடைமுறைகளையும் எப்போதும் கையாள வேண்டும் என்ற உறுதி மொழியையும் சேர்த்து எடுப்போம். 

மேலும் படிக்க: வெண்டைக்காய் டிமாண்ட்...கிலோ ரூ.800 க்கு விற்கும் விவசாயி!

Continues below advertisement
Sponsored Links by Taboola