சில கேள்விகளை நாம் கேட்பதே இல்லை. ஆனால், சில நேரங்களில் அது ஏன் என்று தோன்றும், ஆனால் யாரிடமும் விடை கிடைக்காது. அப்போது தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கடுப்பாகி கூகுள் தேடுபொறியை தட்டிவிடுவோம்.
அப்படி ஒரு கேள்வி, ஒரு சந்தேகத்திற்கான விடைதான் இது.
ஒரு சில கார்களில், பின்புற கண்ணாடியில் சரியான இடைவெளியில் மெலிதான கோடுகள் போட்டிருப்பார்கள். எல்லா கார்களிலும் இது இருக்காது. ஆனால் சில கார்களில் இருக்கும். அது ஏன் என்பதற்கான விளக்கம் வருமாறு:
அதற்கு காரணம் இருக்கு. குளிர் காலங்களிலோ அல்லது வேறு சில காரணத்தினாலோ கண்ணாடி மீது நீர் திவலைகள் படியும்.
உதாரணத்துக்கு கொதிக்க வைத்த நீருக்கு மேல், மூடி போட்டு மூடினால் எப்படி தட்டின் மீது நீர்த்திவலைகள் படியுமோ, அது போல காருக்குள் இருக்கும் ஈரப்பதம் ஆவியாகி, அவை நீர்த்திவலைகளாக கண்ணாடி மீது படியும். முன்பக்க கண்ணாடி என்றால் வைப்பர் போட்டு துடைத்து விடலாம். பின் பக்க கண்ணாடி என்றால், எல்லா கார்களிலும் பின்னால் வைப்பர் இருக்கும் என்று சொல்ல முடியாது.
அதனால் சிறு கோடுகள் போல இருக்கும் மெல்லிய மின் கம்பிகளை பதித்துள்ளனர். அவை நீர் திவலை அல்லது பனிப்படலத்தை மின்சக்தி மூலம் வெப்பத்தை ஏற்ப்படுத்தி நீக்கிவிடும். இதற்கு முன்னர் சுடுகாற்றை பயன்படுத்தும் முறை எல்லாம் கூட இருந்தது. இப்போ சிம்பிளா வேலை முடிந்தது. ஒரு சில ஹையர் ரக கார்களில் முன் பக்கத்திலும் இது போன்ற டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டாலும், அவை கண்ணுக்கு தெரியாதவாறு பதிக்கப்படுகின்றன.
சரி முன்னால் உள்ள கண்ணாடியில் ஏன் கோடு போடுவதில்லை?
சரி அப்படி என்றால் முன்னால் உள்ள கண்ணாடிகளில் ஏன் கோடு போடப்படுவதில்லை. அங்குமட்டும் நீர்த்திவலைகள் படியாதா என்று கேட்கலாம்? முன்பக்க விண்ட்ஷீல்டை வெப்பமாக வைத்துக் கொள்ளும் மெக்கானிஸதை ப்ரமைரி கார் டீஃப்ராஸ்டர் என்று அழைக்கின்றனர். இந்த அமைப்பு காரின் டேஷ்போர்டு வென்ட் (துளைகள்) வழியாக விண்ட்ஷீல்டு மீதான காற்றை வெதுவெதுப்பாக்குகிறது. இதனால் முன்பக்க கண்ணாடியில் ஏதேனும் பனி மண்டலம் படியாமல் தவிர்க்க முடிகிறது.
உலகின் பல பிரபல ஆட்டோமேக்கர்கள் பலவும் முன்பக்க விண்ட்ஷீல்டில் கண்ணுக்குத் தெரியாத எலெக்ட்ரிக் சிஸ்டம் பொருத்தி டீஃப்ராஸ்டிங், டீஃபாகிங் ஆகியனவற்றை குறைக்க முயற்சித்து வருகின்றன. ஆனால், ஆட்டோமேக்கர்ஸ் அவ்வாறு முன்பக்க விண்ட்ஷீல்டில் இன்விஸிபிள் எலெக்ட்ரிக் சிஸ்டம் வைத்தால் விசிபிலிட்டி அதாவது ஓட்டுநர் பார்க்கும்போது வெளியே உள்ளவை தெரியும் திறன் குறைந்துவிடும் என்பதால் இதனைச் செய்ய தயங்குகின்றன. தொடர்ந்து இதன் நிமித்தமாக பல ஆய்வுகளும் நடைபெறுகின்றன.