ஏர்போர்ட்டில் இருக்கும் உணவகங்களிலோ, கடைகளிலோ ஏதாவது வாங்கினால் விலை தாறுமாறாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனாலேயே பசித்தால் கூட பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டு பயணத்தைத் தொடர்வோர் தான் அதிகம்.


மிடில் கிளாஸ் மக்களும் அதிகமாக விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில் விமான நிலையத்தில் பர்ச்சேஸ் அதைவிடுங்க ஸ்நாக்ஸ் என்பது மட்டும் அவர்களுக்கு இன்னும் எட்டாக்கணியாக இருக்கிறது.


இப்படியான மக்களுக்காகத் தான் ஏர்போர்ட் லவுஞ்சுகள் உள்ளன. ஒரு சில டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் லவுஞ் ஆக்சஸ் இருக்கும். ஹை ரேட்ட, ஹை வேல்யூ கார்ட்ஸ் இருக்கும். அதுவும் குறிப்பாக ஆக்சிஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டுகளில் இந்த பாயின்ட் 5 லவுஞ் ஆக்சஸ் வசதி இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டு இந்த லவுஞ்சை நீங்கள் பயன்படுத்தலாம். முதலில் சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே லவுஞ் இருந்தன. ஆனால் இப்போது மெட்ரோ, டயர் 2 நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் லவுஞ் வந்துவிட்டன. இந்த லவுஞ்களை நீங்கள் பயன்படுத்த சில விதிமுறைகளை விதித்துள்ளன வங்கிகள்.


அதாவது வருடத்தில் நீங்கள் 8 முறை இந்த லவுஞ்களைப் பயன்படுத்தலாம். ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றால், அதை நான்கு காலாண்டாக பிரிப்பர். ஒவ்வொரு காலாண்டிலும் 2 முறை இதனை நீங்கள் பயன்படுத்தலாம். ஜனவரி முதல் மார்ச் வரை இரண்டு முறை, ஏப்ரல் முதல் ஜூன் வரை இரண்டு முறை, ஜூலை முதல் செப்டம்பர் வரை இருமுறை, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடைசி காலாண்டில் 2 முறை என மொத்தம் 8 முறை இந்த லவுஞ்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ருபே பிளாட்டினம் கார்டுகள், பேடிஎம் பேங்கின் ருபே கார்டு ஆகியனவற்றிற்கு இலவசமாக இந்த லவுஞ்சைப் பயன்படுத்தலாம். விசா கார்டு இருந்தால் ரூ.2 சார்ஜ் செய்வார்கள். மாஸ்டர் கார்டு இருந்தால் ரூ25 எடுப்பார்கள். ஆனால் 24 மணி நேரத்தில் அந்தப் பணத்தைத் உங்கள் கணக்கில் திரும்பியளித்துவிடுவார்கள். இந்த சிறு தொகை பெறுவதுகூட ஆத்தன்டிக்கேஷனாக மட்டுமே.


இந்த லவுஞ்சைப் பயன்படுத்த கார்டை அதன் உரிமையாளர் தான் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் கார்டை உங்கள் நண்பரோ, அல்லது நண்பரின் கார்டை நீங்களோ பயன்படுத்த முடியாது. இது உள்நாட்டில் மட்டும் தான் பயன்பெற முடியும். வெளிநாட்டு லவுஞ்களை பயன்படுத்த முடியாது.


வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும்போது இதுபோன்ற லவுஞ்சை இலவசமாக பயன்படுத்தவே முடியாதா என்றால் அதற்கு வேறு வழி இருக்கிறது. கிரெடிட் கார்ட், அதுவும் அனெக்ஸ், ரெஜிலா போன்ற வசதிகள் உள்ள கார்டுகளைப் பயன்படுத்தி இந்த வசதியைப் பெறலாம். கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாதோரே இல்லை என்ற நிலையில் நமக்கான கார்டில் என்ன சலுகைகள் இருக்கிறதோ அதை முழுமையாக பெறுவது புத்திசாலித்தனமே!