நாம் பொதுவாக இஞ்சி டீ, ப்ளாக் டீ அல்லது கிரீன் டீ போன்றவற்றை பற்றி அறிந்திருப்போம். ஆனால் ஒயிட் டீ என்று ஒன்று உள்ளது. அதை பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். மற்ற டீ வகைகளை விடவும் ஒயிட் டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதை பற்றி விளக்குகிறது இந்த கட்டுரை.
எப்படி கிடைக்கிறது வெள்ளை டீ?
தேயிலை செடியில் இருந்து தான் அனைத்து விதமான தேயிலைகளையும் பறிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு வகையான தேயிலையும் எப்படி பதப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் நன்மைகள் மாறுபடும். கிரீன் டீ என்பது கொழுந்து இலைகளை மட்டுமே எடுத்து காயவைத்து பொடித்து பேக் செய்வது. ஆனால் ஒயிட் டீயின் தேயிலை குறைந்த அளவே பதப்படுத்தப்படும். செடியின் இலைகளும் மொட்டுகளும் முழுமையாக பூப்பதற்கு முன்னரே எடுக்கப்படும். அந்த மொட்டுகளின் மீது வெள்ளை முடிகள் காணப்படும். அதனால் தான் அவை ஒயிட் டீ என்று அழைக்கப்படுகிறது. இந்த தேயிலை வசந்தகாலத்தில் அதாவது வருடத்தில் ஒருமுறை மட்டுமே அதுவும் சூரியன் உதயமாவதற்கு முன்னரே சுமார் 3ல் இருந்து 5 மணிக்குள் பறித்து ஈரப்பதத்தை நீக்கி பேக் செய்து விடுவார்கள். கிரீன் டீயை விடவும் வெள்ளை டீயில் 30 % அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.
ஒயிட் டீ நன்மைகள்:
ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாக உள்ளதால் உடலில் தேங்கி இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அளித்துவிட்டு புது செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இவை இரத்த அழுத்தம், நீரிழிவு, வயதாகிய தோற்றம் உள்ளிட்டவைக்கு தீர்வு அளிக்கும். ஒயிட் டீ அனைத்து வயதினருக்கும் ஏற்றது. பற்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும். ஒயிட் டீயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றத்தை போக்கி, பற்களை வெண்மையாக்கி, சொத்தை பற்கள் உருவாகுவதை தடுக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கும். மெனோபாஸ் முன்னர் வர கூடிய மன அழுத்தத்தை போக்கி எலும்புகளை வலுவாக்கும். புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய தன்மை கொண்டது ஒயிட் டீ. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை அருந்துவதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.
ஒயிட் டீ தயாரிப்பு:
ஒயிட் டீ தயாரிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. தண்ணீர் 70 டிகிரி சென்டிகிரேடு மேல் கொதிக்க வைக்க கூடாது. தண்ணீர் பாத்திரத்தின் அடியில் கொதி நிலை வரும் போதே நிறுத்தி விட வேண்டும். சுமார் 7 இலைகளை சேர்த்து மூடிவைத்துவிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி குடிக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்