காஃபி, டீ பிரியர்களாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் கருதி க்ரீன் டீக்கு மாறிவிடலாம் என்று முடிவெடுப்பவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் இக்கட்டுரையில் காணலாம்.
க்ரீன் டீ, உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, குடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். க்ரீன் டீ உடன் மிளகுத்தூள் சேர்த்தால் அது குடல் பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர் கரண் தெரிவிக்கிறார்.
மிளகுத் தூள் க்ரீன் டீ உடன் சேர்ப்பது நல்லது-ஏன்?
க்ரீன் டீ உடன் வீட்டில் நான் சமையலுக்கு பயன்படுத்தும் பொருளான மிளகு சேர்ப்பது ஏன் நல்லது என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார். மசாலாப் பொருட்களின் ராஜா என்றும் அழைக்கப்படும் கருப்பு மிளகு, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மிளகு பைபெரின் என்ற பொருள் உள்ளது. இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உறுஞ்சும் செயல்பாடு சீராக இருக்க உதவும். இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடண்ட் ஃப்ரீ ரேடிக்கல்கள் நியூட்ரலைஸ் செய்ய உதவும். இதனால் புற்றுநோய், இதய நோய், நம்பு மண்டலம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க்கும் என்று ஆயுர்வேத மருத்துவர் தெரிவிக்கிறார்.
உணவுப் பொருட்களில் மிளகு சேர்க்கப்படும்போது வைட்டமின், மினரல்ஸ் ஆகியவை உடலில் உறிஞ்சப்படுவது மேம்படும். வைட்டமின் ஏ, சி, பி6. செலீனியம், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்டவைகள் உணவில் பைபரின் இருக்கும்போது உறிஞ்சப்படுவதும் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
க்ரீன் டீ:
க்ரீன் டீயில் உள்ள கேட்சின்கள் (Catechin) பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது குடல் ஆரோக்கியம், தோல், மூளை செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு, எடை அதிகரிப்பதையும் இது தடுக்கிறது. பெரும்பாலும், உடல் எடையை நிர்வகிக்கவே பால் கந்த டீக்கு பதிலாக க்ரீன் டீ பலரின் தேர்வாக இருக்கிறது.
க்ரீன் டீ + மிளகுத் தூள் நல்லதா?
க்ரீன், மிளகுத் தூள் இரண்டிலும் பயோஆக்டிவ காம்ப்வுண்ட் இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடல் ஆரோக்கியமான இருந்தால் உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராக இயங்கும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, உடல் எடையை நிர்வக்கிக்கவும் இது உதவும் என்று சொல்லப்ப்படுகிறது.
மிளகில் உள்ள பைப்ரின் சுவாச கோளாறுகளுக்கும் உதவும். சளி, காய்ச்சல், சைனஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் மிளகு உதவும். மிளகு சில நோய் பரப்பும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரா உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவிகின்றனர்.
க்ரீன் டீயில் அரை சிட்டிகை அளவு மிளகுத் தூள சேர்த்து அருந்தலாம். இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க, இன்சுலின் சென்சிட்டிவிட்டி சீராக இருக்க உள்ளிட்டவற்றிற்கு உதவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.