TNPSC Recruitment: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு:


ஒருங்கிணைந்த சிவில் பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டிருந்தது. அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள, பணியிடங்களுக்க்கு விண்ணப்பிக்க இன்றே (19-07-24) கடைசி நாளாகும்.


மொத்த பணியிடங்கள் - 2030


வயது வரம்பு விவரம்: குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு 2024க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, தேர்வாளர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவரது வயது 18, 20, 22 அல்லது 26 வயதுக்குக் குறைவாகவோ அல்லது 30 அல்லது 40 வயதுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி - Probation Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  கமர்சியல் வரித்துறை அதிகாரி பணிக்கு  B.A., B.Sc., or B.Com வணிகவியல் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  உதவி செக்சன் ஆபிசர், சிறப்பு பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.  Forester பணியிடத்திற்கு 1. Agriculture 2. Animal Husbandry 3. Botany 4. Chemistry 5. Computer Applications / Computer Science 6. Engineering (All Engineering subjects including Agricultural Engineering) 7. Environment Science 8. Forestry 9. Geology ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்: 


நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150


எழுத்துத் தேர்வு - ரூ.100


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு ஆகிய இரண்டில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள முகவரியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.  ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அந்த கணக்கின் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பங்களில் பிழைத் திருத்தம் செய்ய கால அவகாசம் - 24.07.2024 12.01 AM - 26.07.2024 11.59PM 


முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள்: 14.09.2024 காலை 09.30 AM முதல் 12.30 P.M. வரை 


முதன்மை தேர்வு நடைபெறும் விவரம் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்பட்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.07.2024 11.59 PM


காலிப்பணியிட விவரங்கள்:


குரூப் 2 பிரிவு


உதவி இன்ஸ்பெக்டர் 
உதவி கமர்சியல் வரி அதிகாரி 
ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி 
Probation Officer
Sub Registrar, Grade-II
சிறப்பு உதவியாளர் 
சிறப்பு பிரிவு உதவியாளர் 
சிறப்பு பிரிவு உதவியாளர்
சிறப்பு செக்சன் அதிகாரி 
சிறப்பு அதிகாரி - ப்ரோக்ராமர்
Forester
Forester


குரூப் 2ஏ பிரிவு 


தனிப்பிரிவு உதவியாளர் 
Residential Warden
Audit Inspector
Assistant Inspector
Handloom Inspector
Supervisor / Junior
Superintendent
உதவியாளர் (ஈரோடு, திருப்பூர், கோவை, விருதுநகர் வரித்துறை அலுவலக பிரிவு)
Revenue Assistant
இதோடு தமிழ்நாடு அமைச்சகங்களில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.