வாரம் ஒரு நாள் அதுவும் ஞாயிறு கிழமை அசைவ உணவு இல்லை என்றால் அந்த வாரம் முழுமையடையாது. அசைவ உணவு சாப்பிட பிறகு சிலருக்கு சோடா பானங்கள் குடிக்க வேண்டும் என தோன்றும். சிலருக்கு இனிப்பு சாப்பிட வேண்டும் என தோன்றும், இது ஒவ்வொருவர் சுவைக்கு ஏற்ப மாறுபடும்.


                         

                   


அசைவ உணவு என்றாலே எப்போதும் எடுத்து கொள்ளும் அளவை விட கூடுதலாக எடுத்து கொள்வோம். உணவு முடித்த பின் அதை செரிப்பதற்க்காக சோடா குடிக்க வேண்டும். என்று நினைத்து பலரும், பல வகையான பானங்களை அவரவர் விருப்பத்திற்கு எடுத்து கொண்டு இருப்பீர்கள் . இதை எடுத்து கொள்வதால், ஏற்கனவே அதிகமாக எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட்டதால் செரிமான மண்டலம் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். இப்போது குளிர்ச்சியாக எடுத்து கொள்ளும் சோடா எடுத்து கொள்ளும் போது செரிமான பிரச்னை வரும். உணவு முழுமையாக செரிமானம் ஆவதற்கு கல்லீரல், கணையம், இரைப்பை என அனைத்தும் ஒரு விதமான அழுத்தத்திற்கு செல்லும். அதனால் அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு, சோடா போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்




அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு நல்ல குளிர்ச்சியாக ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என தோன்றும். இது மிகவும் தவறான உணவு பழக்கம். பொதுவாக உணவை எடுத்து கொண்ட பிறகு, செரிமான உறுப்புக்கள் அமிலங்களை சுரக்கும். இது செரிமானத்தை துரிதப்படுத்தும். இந்த நேரத்தில் குளிச்சியாக எடுத்து கொள்வது, செரிமானத்தை தாமதப்படுத்தும். அதனால் ஒரு மாதிரி அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டாம் .




வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்.- அசைவ உணவு எடுத்து கொண்ட பிறகு ஒரு 30 நிமிடங்கள் கழித்து 1கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை மெதுவாக குடிப்பது, செரிமானத்தை துரிதப்படுத்தும். செரிமான அமிலங்கள் சரியாக வேலை செய்ய உதவும். மேலும், இது கழிவுகளை வெளியேற்ற உதவும். அதிகமாக சாப்பிட பின் செரிமான வேலை முடிந்து, ஊட்டச்சத்துகள் உடலில் இரத்தத்தில் கலந்து, கழிவுகளை வேலையற்ற இது உதவும். உடல் லேசாக இருப்பது போன்று தோன்றும். அதனால் அசைவ உணவு சாப்பிட பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்.




மெதுவாக நடக்கலாம் - வயிறு முட்ட சாப்பிட்டு நகர கூடிய முடியாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருப்போம். அப்படி இல்லாமல் மெதுவாக ஒரு 20 நிமிடங்கள் காலார நடப்பது , உடலை லேசாக வைக்க உதவும். இது செரிப்பதற்கு உதவும்.




வேகமாக நடக்க கூடாது. வீட்டிற்குள் அல்லது, வீட்டிற்கு வெளியே நடக்கலாம். இதனால் உடலில் கொழுப்புகள் சேர்வது குறையும். உணவுகள் அனைத்தும் கலோரிகளாக மாற்றப்பட்டு பயன்படுத்த பட்டு விடும்.