உடல் ஆரோக்கியத்தை மட்டுமே பிரதானம். மற்றவரை எல்லாம் அடுத்து தான் என நினைப்பவர்கள் ஆரோக்கியத்திற்காக முதலில் ஆரம்பிப்பது உடற் பயிற்சியும், உணவு முறை மாற்றமும் தான். இதில் உடற்பயிற்சி செய்வதற்கும் முன்னும் பின்னும்  சில விஷயங்களை செய்ய வேண்டும் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.


உடற்பயிற்சி செய்வதற்கு முன் :


செய்ய வேண்டியவை - எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும், முதலில் வார்ம்மப் பயிற்சிகளை செய்ய வேண்டும். இது தசை இறுக்கத்தை குறைத்து வளைவு தன்மையுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள உதவும். மேலும், பயிற்சியின் போது தசைப்பிடிப்பு, தசை வலி, போன்ற பிரச்சனைகள் வராமல் தற்காத்து கொள்ள முடியும். பயிற்சிக்கு முன்னதாக வார்ம்மப் பயிற்சிகள் கட்டாயம் செய்ய வேண்டும். பயிற்சி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தேவையான தண்ணீர் குடித்து கொள்ள வேண்டும். பயிற்சியின் நடுவில் தண்ணீர் குடித்தால் அது உடலை கனமாக வைக்கும். மேலும் பயிற்சி செய்ய கடினமாக இருக்கும்.




செய்ய கூடாதவை - பயிற்சியில் இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது. இதனால் பயிற்சி செய்வதற்கு கடினமாக இருக்கும்.  மேலும். பயிற்சிக்கு முன் எந்த உணவையும் எடுத்து கொள்ள கூடாது. காலை வெறும் வயிற்றில் பயிற்சிகளை செய்யலாம். அல்லது சாப்பிட்டு 3 -4 மணி நேரம் இடைவெளி விட்டு பயிற்சிகளை செய்யலாம்.




உடற்பயிற்சிக்கு பின்             


 செய்ய வேண்டியவை - உடலை தளர்வாக வைக்க ரிலாக்ஸாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். பயிற்சிக்கு பிறகு போதுமான ஓய்வு அவசியம். ஒவ்வொரு உடற் பயிற்சிக்கும் இடையே ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். இது உடலை அதிகமாக சோர்வாக ஆக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்வதற்கு உதவியாக இருக்கும். நன்றாக வியர்வை துடைத்து, ஒரு 30 நிமிட இடைவெளிக்கு பிறகு தேவையான தண்ணீர் குடிப்பது நல்லது. உடனே தண்ணீர் குடித்தால் அது வீக்கத்தை தரும். போதுமான க்ளுகோஸ், புரத சத்து மிக்க உணவு, வாழை பழம் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.




செய்ய கூடாதவை - உடனே குளிக்க கூடாது. வியர்வை குறைந்த பிறகு குளிக்க செல்ல வேண்டும். பயிற்சிக்கு பிறகு எந்த ஓய்வும் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த வேளைகளில்  ஈடுபடுவது, உடலை மேலும் சோர்வாக வைக்கும். உடற் பயிற்சிக்கு பிறகு உடனே சாப்பிட கூடாது. 30  நிமிடங்கள் இடைவெளி வேண்டும். இடைவெளி விட்டு சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லது.


இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் போதுமான உடற்பயிற்சி நாள்தோறும் செய்யும். உடல் ஆரோக்கியம் பேணுங்கள்.