வாழை இலை பயன்படுத்தி உணவை பேக்செய்து சாப்பிட்ட போது எந்த பிரச்சனையும் வராமல், உடல் ஆரோக்கியமாக இருந்தது. உணவு கேட்டு போகாமல், அந்த இலை ருசியுடன் நீண்ட நேரம் இதில் பேக் செய்து வைக்க முடிந்தது. வாழை இலை மாறி பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது.இப்போது பிளாஸ்டிக் மாறி அடுத்து, அலுமினிய தாள் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியத்தாள் பயன்படுத்துவதால், உடலுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன.


பெரும்பாலான மக்கள் அலுமினியம்  ஒன்றும் செய்யாது, என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறு. கொஞ்சம் நேரம்தானே இருக்கு. அது என்ன செய்ய போகுதுனு என்று  நினைக்காதீர்கள், இது  செரிமான  பிரச்சனையில் இருந்து சிறுநீரக பிரச்சனை வரை பல்வேறு உபாதைகளைத் தருகிறது. அலுமினியம் என்ன மாதிரியான  விளைவுகளை ஏற்படுத்தும் என பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம் நடத்திய ஆராய்ச்சியில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.




பாக்டீரியா ஆபத்து -  நீண்ட நேரம் அலுமினியத்தில் உணவை பேக் செய்து வைப்பதால், காற்று புகாமல் இருக்கும், இதனால் உணவில் இருக்கும் எண்ணெய் மற்றும் மசாலா பொருள்கள் அலுமினியத்துடன் வினை புரிய ஆரம்பிக்கும். இதனால் இது ஆரோக்கியத்திற்கு கேடாக முடியும். ஒவ்வொரு உணவுப் பொருளும், ஒரு குறிப்பிட்ட நேரம்தான் அதன் சுவை, மனம் மாறாமல் இருக்கும். அதன்பிறகு அதில் பாக்டீரியா வளர்ந்து உணவு வீணாகத் தொடங்கும். அலுமினியத் தாளில் நீண்ட நேரம் பேக் செய்து  இருந்தாலும், உணவில் பாக்டீரியா வளர ஆரம்பிக்கும். இது பல்வேறு செரிமான பிரச்சனைகளை தரும்.



ஆண்களுக்கு விந்தணு குறைபாடு வரலாம். நீண்டநேரம் அலுமினிய தாளில் வைத்து உணவு சாப்பிடுவதால், ஆண்களுக்கு விந்தணு தன்மை  மாறுபடலாம். இதனால் மலட்டுத்தன்மை பிரச்னை வரும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா (Dementia)  - அலுமினிய தாளில் சூடாக உணவை பேக் செய்து சாப்பிடும் போது,  மறதி நோய் மற்றும், வயதான காலத்தில் வரும் அல்சைமர் நோய் வரலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.




சிறுநீரக நோய் - சூடான உணவை நீண்ட நேரம் அலுமினியத்தாளில் வைத்து சாப்பிடுவதால், சிறுநீரக நோய் வரும். சிறுநீரக கல் , சிறுநீர் வெளியேற்றுவதில் பிரச்சனை , பாக்டீரியா தொற்றினால் தொற்று நோய்கள் வரலாம். நோயெதிர்ப்பு சக்தி குறைதல்- அலுமினியம் தாளில் தினம் உணவை வைத்து சாப்பிடுவதால், உடலில் எதிர்மறையாக வினை புரிய தொடங்கும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது.


இப்படி ஒவ்வொரு உறுப்புகளிலும் பல்வேறு பிரச்சனைகளை தரலாம். அதனால் ஹோட்டல்களில் உணவு வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருங்கள். ஆரோக்கியம்தான்  முக்கியம்.