நெல்லிக்காய், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும்.  இது நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பல்வேறு ஆய்வுகளின்படி, நெல்லிக்காய் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  இது பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, சருமம் மற்றும் முடியை நீரேற்றமாக வைத்திருப்பதிலும்  பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. நெல்லிக்காய் மிகவும் ஆரோக்கியமான உணவாகும். எனவே நெல்லிக்காயை நமது அன்றாட உணவில் சேர்த்து கொள்வது நமது உடலுக்கு நன்மை பயக்கும். 


நெல்லிக்காயின் பலன்களை முழுமையாக பெற, வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.


1. எடை இழப்பு


வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் எடையை குறைத்து நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற நினைப்பவர்களுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. நெல்லிக்காய் ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. இது கொழுப்பை எரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. எனவே நெல்லிக்காய் சாறு உடல் எடை அதிகரிக்காமல் தடுத்து, அதிக ஆற்றலை நமக்கு வழங்குகிறது.


2. செரிமானத்தை மேம்படுத்தும்


நெல்லிக்காய் சாறு ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்க உதவுவதாக கூறப்படுகின்றது. அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் இது உதவுகிறது.


3. கண் பார்வைக்கு நல்லது


நெல்லிக்காய் பார்வையை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. இதில்  உள்ள கரோட்டின், பார்வையை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், கண்புரை, எரிச்சல் மற்றும் ஈரமான கண்கள் போன்ற பிரச்சனைகளைப் போக்குவதாகவும் கூறப்படுகிறது.


4. இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நெல்லிக்காய் சிறந்த உணவாக இருக்கும். ஆய்வுகளின்படி, இது நீரழிவு நோயின்  அபாயத்தைக் குறைக்க உதவுவதாகவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.


5. ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது


நெல்லிக்காய் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் முதலில் உட்கொண்டால், அது நாள் முழுவதும் அதிக ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. நெல்லிக்காய் சாறு காலையில் ஆற்றலை ஊக்குவிப்பதுடன், நம்மை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.


பொறுப்புத்துறப்பு :


இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.


மேலும் படிக்க


Bangaru Adigalar Death LIVE: பங்காரு அடிகளார் உடலுக்கு பிரியாவிடை தரும் மனைவி, பிள்ளைகள், பக்தர்கள்!


Leo box office collections Day 1: பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கிய லியோ படம்.. முதல் வசூலே இத்தனை கோடியா..? கொண்டாடும் ரசிகர்கள்