Bangaru Adigalar Death LIVE: நல்லடக்கம் செய்யப்பட்ட பங்காரு அடிகளார் உடல்...!
Bangaru Adigalar Death LIVE Updates: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் அக்டோபர் 19ஆம் தேதி காலமானார்.
நேற்று (அக்டோபர் 19) ஆம் தேதி மாரடைப்பால் காலமான ஆதிபராசக்தி சித்தர் பீட தலைவரும், ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளார் உடல் கோவிலின் கருவறை - புற்று மண்டபத்திற்கு இடையே சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் தற்போது பங்காரு அடிகளார் உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஆதிபராசக்தி கோவில் கருவறையை சுற்றி தற்போது பங்காரு அடிகளார் உடல் எடுத்து வரப்படுகிறது.
ஆன்மிக பணியை தொடங்கிய இடத்திலேயே பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருகிறது.
பங்காரு அடிகளார் உடலுக்கு நடைபெற்று வரும் இறுதிச் சடங்கு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ. அன்பரசன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இசையமைப்பாளர் ட்ரம்ஸ் மணியும் இருக்கிறார்.
பங்காரு அடிகளார் உடலுக்கு நடைபெறும் இறுதிச் சடங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார்.
பங்காரு அடிகளார் உடலுக்கு நடைபெறும் இறுதிச் சடங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை நடைபெற்று வருகிறது.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்தினார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த காவலர்கள் வருகை.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தி வருகிறார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சாலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான ஆன்மிக குரு பங்காரு அடிகளார்” என்று கூறினார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சாலி செலுத்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ”தமிழகத்தில் மதமாற்றம் நடைபெறுவதை தடுத்ததில் ஆதிபராசக்தி மன்றங்கள் முக்கிய பங்காற்றின”என்று கூறினார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு இஸ்லாமியர்கள் பலர் அஞ்சாலி செலுத்தி வருகின்றனர்.
பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்,” பங்காரு அடிகளார் இல்லை என்றால் தமிழகத்தில் இந்து மதம் தன்னுடைய அற்புத நிலையை இழந்திருக்கும்” என்று கூறினார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தி வருகிறார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”நானும் பங்காரு அடிகளாரும் அப்பாவும்- மகனும் போல்” என்று கூறினார்.
மேல்மருவத்தூரில் வைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் சற்று நேரத்தில் வர உள்ளார்
பக்தர்கள் கடுமன வலியுடன் அழுது கொண்டு வருவதால், அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையில் இருக்கைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிர்வாகம்.
பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு நேரலை..
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்த வருகின்றனர்
பங்காரு அடிகளார் மறைவையொட்டி மேல்மருவத்தூரில் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருவதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்; அவரது வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என ட்விட்டரில் உருக்கம்.
பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் இன்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
பங்காரு அடிகளார் மறைவு - ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆன்மீகத்தை அடித்தட்டு மக்களுக்கு அன்னையின் பரிவுடன் வழங்கி, பெண்களுக்கு அன்னையின் கருவறைக்குள்ளே சென்று ஆராதனைகள் செய்யக்கூடிய அருளாசி வழங்கி, நாடெங்கும் சக்தி பீடங்கள், வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, ஏற்றத்தாழ்வுகள் இல்லாது, சமூகத்தின் எல்லா நிலை மக்களுக்கும் ஆன்மீகத்தின் அமைதியையும் ஆறுதலையும் வழங்கி அன்னையின் அவதாரமாக திகழ்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் நம்மிடையே வாழும் தெய்வத்தின் வடிவாக வாழ்ந்தவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார்.
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் பாஜக சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் பூவுலக நிறைவுச் செய்தியை தொடர்ந்து, அம்மாவின் அவதார வடிவாகத் திகழ்ந்து இறைவன் திருவடி நிழலில் அடைக்கலமாகி இருக்கும் அடிகளாரின் பிரிவு துயர் ஆற்ற இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள், அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பங்காரு அடிகளார் மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு.. ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல கல்வி நிறுவனங்களை நிறுவி ஏழை மாணவர்களுக்கு கல்வி தந்துள்ளார்.கருவறையில் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என புரட்சி செய்தவர். பெண்கள் கருவறையில் செல்லலாம் என புரட்சி செய்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். பல மன்றங்களை துவங்கி பெண்களை தலைவராக்கினார்.
உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்களுக்கும், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும்; அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய புகழ், ஆசிர்வாதம் என்றும் மறையாது, நாளை மேல்மருவத்தூர் செல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி தனது இரங்கல் குறிப்பில், 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் மீதும் - கழகத்தலைவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மீகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது இரங்கல் குறிப்பில், ‘மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வந்த திரு. பங்காரு அடிகளார். உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறைக்குள் பெண்களே சென்று பூஜை செய்யலாம் என்கின்ற முறையை உருவாக்கி ஆன்மீகத்தில் பெரும் புரட்சி செய்தார்,சித்தர் பீடம் மூலமாக பல்வேறு மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடங்கி மருத்துவம் மற்றும் கல்விச் சேவை ஆற்றி வந்த அவரது இறப்பு மக்களுக்கு பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், அவரது பக்தர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரங்கல் குறிப்பில், ’மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவான அருள்திரு. பங்காரு அடிகளார் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பங்காரு அடிகளார் எனது சமகாலத்தவர் என்பதையும் கடந்து எனது குடும்ப நண்பர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையுண்டு என்பதற்கிணங்க ஆன்மிக வழியில் மக்களை முன்னேற்றவும், அவர்களுக்கு அமைதி வழங்கவும் உழைத்தவர். இறைவனுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு; அவர்களால் இறைவனை நெருங்க முடியாது; குறிப்பாக பெண்கள் கருவறையை நெருங்கக் கூட முடியாது என்று திட்டமிட்டு வழக்கங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் பங்காரு அடிகளார் தகர்த்தார். பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்கு சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஏற்படுத்தியவர். அந்த வகையில் ஆன்மிகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் பங்காரு அடிகளாருக்கு உண்டு.
பெண் குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துவது தான் தாம் அவதரித்ததன் நோக்கம் என்று பங்காரு அடிகளார் அடிக்கடி கூறுவார். அதற்கேற்ப மகளிர் முன்னேற்றம் என்ற உன்னத நோக்கத்திற்காக அருள்திரு. பங்காரு அடிகளாரும், ஆதிபராசக்தி சித்தர் பீடமும் ஆற்றிய பணிகள் போற்றத் தக்கவை. இயற்கையை போற்றியும், அனுசரித்தும் வாழ வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்ற பங்காரு அடிகளாரின் அறிவுரை ஆன்மிக எல்லையை தாண்டி அனைவருக்கும் பொதுவானது. அவரது அறிவுரை எவ்வளவு உண்மையானது என்பதை காலநிலை மாற்றம் என்ற பெயரில் இன்று நடக்கும் நிகழ்வுகள் மூலம் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டிருக்கிறது.
அருள்திரு. பங்காரு அடிகளார் அவர்களின் கல்விப் பணியும் பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வியில் தொடங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை & அறிவியல், கல்வியியல் உள்ளிட்ட அனைத்து புலங்களிலும் பட்டம் வழங்கும் கல்லூரிகள் வரை தரமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்விச் சேவை வழங்குதல், கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க பொது மற்றும் பல் மருத்துவமனைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பள்ளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் என அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் வாயிலாக அருள்திரு.பங்காரு அடிகளார் மேற்கொண்ட பணிகள்அனைத்தும் பாராட்டத்தக்கவை.
பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அமமுக தலைவர் டிடிவி தினகரன், ‘கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நாளை 20.10.2023 மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்
பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.
அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான வழக்கப்படுத்தினார். நடைமுறைகளை
கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.
அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் "நம்மைக் காக்கும் 48" திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் இன்று அதாவது அக்டோபர் 19ஆம் தேதி காலமானார். இவருக்கு வயது 82.
Background
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் இன்று அதாவது அக்டோபர் 19ஆம் தேதி காலமானார். இவருக்கு வயது 82.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தலைமை ஆன்மீகவாதியாக இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும் இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயம் இவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். ஆதிபராசக்தி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்தும் பகதர்கள் பரவலாக வருவார்கள். இந்த கோவிலுக்கு பொதுவாகவே பெண் பக்தர்கள் அதிகம். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டதில், இங்கு வந்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல், பெண்கள் கோவிலின் கருவறைக்குள் சென்று வழிபடலாம். மேலும், ஐய்யப்பன் கோவிலுக்கு ஆண்கள் இருமுடி கட்டிக்கொண்டு செல்வதைப் போல், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்ததனர். இதற்கெல்லாம் வழிவகுத்தவர் மறைந்த பங்காரு அடிகளார் ஆவார்.
ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நல குறைவினால் உயிரழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே முன்னாள் ஆசிரியர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1966ஆம் ஆண்டு துவக்கினார்.
மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது. தைப்பூசம் நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாகவே சற்று உடல் நல குறைவில் இருந்து வந்த பங்காரு அடிகளார் இன்று மாலை திடீர் மரணமடைந்தார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என முதலில் உருவாக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். அவருக்கு வயது 82. ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இவர் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது.
பல்வேறு பிரபல அரசியல் தலைவர்கள் ஆன்மீகவாதிகள் என அவ்வப்போது அவரை சந்திப்பது வழக்கம். தமிழ்நாடு மட்டுமல்லாது, 12 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சித்தர் பீடத்திற்கு பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற நிலை இருந்து வந்த நிலையில் பெண்களை கருவறைக்கு நேரடியாக சென்று அபிஷேகம் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர். மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் கருவறைக்கு செல்லலாம் என வழிபாட்டுத் தலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -