வெயில் காலத்தில் உடல் எடை சீக்கிரம் குறையும். காரணம் அதிகமாக வியர்க்கும். வியர்த்தல் எடைக்கு குறையும் இப்படி பல கட்டுக்கதைகள் உடல் எடையை சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. எதை தின்றால் பித்தம் தெளியும், எதை செய்தால் எடை குறையும் என ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து  கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் உடல் பருமன். யாருக்கு ஒல்லியா இருக்கணும் னு ஆசை இல்லாமல் இருக்கும். எல்லாருக்கும் சிக்குன்னு சிலிமா இருக்கனும் ஆசை தான் . அதுக்காக இந்த மாதிரியான வாட்ஸாப் வரும் மருத்துவ குறிப்புகளை நம்பி ஏமாற வேணாம் .




உடலில் கிட்டத்தட்ட 2-4 மில்லியன் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றது. உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேறுகிறது. இது  தினம் உடலில் இருந்து வெளியேறும். உடலில் வெப்பநிலையானது வியர்வையாக வெளி வந்து விடும். வெயில் காலத்தின் போதோ, கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் போதோ உடலில் இருந்து வியர்வை வெளியில் வரும். இப்படி வியர்வை வெளியில் வரும் போதெல்லாம் கொழுப்பு குறைகிறது என்று அர்த்தம் இல்லை.


உடற்பயிற்சி செய்யும்போது உடலில் இருந்து கொழுப்பானது ஆற்றலாக பயன்படுத்தப்படும். இந்த ஆற்றல் பயன்படுத்திய பிறகு வியர்வையாக வெளியில் வருகிறது. அதனால் கொழுப்பு பயன்படுத்த படுகிறது. மறுபடியும் சாப்பிடும் போது உணவில் இருந்து கொழுப்பு உடலில் சேர ஆரம்பிக்கும். உடல்எடை குறைப்பதில் வியர்த்தல் நிச்சம் உதவுகிறது. இதில் உணவு, மற்றும்  செய்யும் வொர்க்அவுட்டை உடலில் இருந்து எவ்வளவு கொழுப்பை இழக்கிறீர்கள் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஆனால் வியர்வை வெளிவருவதால் மட்டும் உடல் எடை குறையாது.


பின்னை எப்படி எடையை குறைப்பது. சரியான உணவு, உடற்பயிற்சி, மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் நிறைய கலோரிகளையும், கொழுப்பையும் எடுக்கலாம். இதன் மூலம் உடல் எடை குறையும். வலிமையான பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலின் தசைகள் வலுவாகவும், கொழுப்பு குறையவும் உதவும். உடல் எடை குறைப்பதில் மிக முக்கியமானது, தினமும் செய்ய வேண்டியது. ஒவ்வொரு நாளும் உடல் பயிற்சி உணவு முறைகள் என மாற்றம் இருந்து கொண்டே இருக்கும் . ஒரேய நாளில் எடை குறையாது. தினம் ஒன்றை செய்வதன் மூலம் ஒரு நாளில் முழுமையாக எடை குறையும். இது தெரியாமல் பலர் நமக்கு வியர்வை வருகிறது, உடல் எடை குறைகிறது என நினைத்து கொண்டிருக்கிறார்கள். வியர்வையும் ஒரு விதகழிவே. மற்றபடி அதுமட்டுமே கொழுப்பை கரைக்கும் என நம்புவது மூடத்தனம்.

Also Read: பிரதமர் மோடி தினமும் என்ன யோகா செய்கிறார் தெரியுமா?