எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உடற்பயிற்சி என்றதும், முதலில் ஆரம்பிப்பது நடைபயிற்சிதான். நடைபயிற்சி செய்வது உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆரோக்கியத்தை தரும். மேலும் தினம் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை  குறையும். இந்த உடல் எடையை பொறுத்தவரை என்ன மாதிரியான நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.




எவ்வளவு நேரம் நடக்க வேண்டும். - ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். தூங்கி எழுந்ததும் முதலில் உடற்பயிற்சி செய்வது அந்த நாளை ஆரோக்கியமாக வைக்க உதவும். இது ஒரு நாளை புத்துணர்வுடனும், சுறுசுறுப்பாகவும் வைக்கும்.




எவ்வளவு தூரம் நடக்கவேண்டும் : 4-5 கிலோமீட்டர் வரை நடக்கலாம். லேட்டஸ்ட்டாக 10000 அடிகள் ஒரு நாளைக்கு நடப்பதால் உடல் எடை குறையும் உதவும். உதாரணமாக 1கிமீ நடப்பதற்கு 1000 அடிகள் எடுத்து வைக்கவேண்டும் என்றால் 10000 அடிகள் எடுத்து வாய்த்த 10 கிமீ தூரம் வரை நடக்கவேண்டும். அதிகாலை நடைப்பயிற்சியில் 4000 முதல் 5000 அடிகள் நடந்தால் , மீதி இருக்கு அடிகளை அன்றைய தினத்தில் கடந்து விடலாம். இது போன்று ஒரு நாளைக்கு 10000 அடிகள் நடக்க வேண்டும்.


நடைப்பயிற்சியில் வகைகள் - நடப்பதில் என்ன வகைகள் என்று கேட்டல் இதில் பல முறைகள் இருக்கிறது. 8 வடிவ நடை பயிற்சி, பவர் வாக்கிங், பின்னோக்கி நடத்தல், என இருக்கிறது. ஒவ்வொரு நடைப்பயிற்சிக்கு ஒவ்வொரு பயன்கள் இருக்கிறது.




நடைப்பயிற்சி எவ்வாறு உடல் எடையை குறைகிறது ?


நடைப்பயிற்சி அனைத்து பயிற்சிகளுக்கு ஆரம்பமாக இருக்கிறது. உடல் எடை குறைப்பதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது. நடைப்பயிற்சியில் போது உடலின் அனைத்து தசைகளை செய்யப்பட துவங்கும். அதிக அளவில் ஆற்றல் பயன்படுத்தப்படும். உடலில் சேர்ந்த கொழுப்பு அனைத்தும் நடைப்பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது. முதல் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நடைப்பயிற்சி மட்டும் போதுமானது உடல் எடை குறைவதற்கு. 




அதற்கு பிறகு, நடையின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடையின் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும். இது மெதுவாக அதிகமானதும், ஓட ஆரம்பிக்க வேண்டும். இது போன்று நடையின் வேகத்திற்கு ஏற்றாற்போல் உடலில் ஆற்றல் பயன்படுத்த படும். உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்க உதவுகிறது.


இதுபோன்று நடை பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் எடை குறைய ஆரம்பிக்கும்