Acid Reflux : நம்மில் பெரும்பாலானோர் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையால் தினசரி அவதிப்பட்டு வருகிறோம். இரைப்பை சுரப்பிகள் செரிமானத்திற்கு தேவையான அமிலத்தை விடவும் அதிகமாக உற்பத்தி செய்வதால் இது நேர்கிறது. 


நெஞ்செரிச்சலை குறைப்பதற்கான வழிகள் சிலவற்றை பரிந்துரைத்துள்ளார் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி.


வயிறு முட்ட சாப்பிடுவதை விடவும் சிறிய அளவில் உணவை மதியத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இது உணவு செரிமானத்தை விரைவு படுத்த உதவும்.  காஃபின் மற்றும் சாக்லேட்கள் சார்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய மூலப்பொருட்கள் உணவுக்குழாயில் உள்ளடக்கங்களை தலைகீழாக மாற்ற கூடிய தன்மையுடையது. இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

 





சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும்:
 
திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற புளிப்பான பழங்களையும் அந்த பழச்சாறுகளையும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிகமான காரம், துரித உணவு வகைகள், மசாலாப்பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால் நெஞ்செரிச்சலை மோசமாக்கும்.



 

சிகரெட், மது பழக்கத்தை கைவிட வேண்டும்:

சிகரெட்டில் உள்ள நிகோடின் உணவுக்குழாய் மற்றும் தொண்டையை பாதித்து செரிமானத்தை பாதிக்கும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும்.  மது அருந்துதல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.




உடல் பருமன்:

உடல் பருமனாக இருப்பவர்கள் நெஞ்செரிச்சலை அனுபவிப்பர். அதற்கு ஒரே தீர்வு உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுதல். இறுக்கமான ஆடைகளை அணிவதும் ஒரு காரணமாக இருக்கலாம். வயிற்றில் அதிகமான அழுத்தத்தை கொடுக்கும் போது அது நெஞ்செரிச்சலை உண்டாகலாம். அதனால் தளர்த்தியான உடைகளை தேர்ந்தெடுப்பது சிறப்பு.

உணவை எப்போதும் நன்றாக மென்று பொறுமையாக உண்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அவசர அவசரமாக உணவை உண்பதால் வயிற்றின் வேலை அதிகமாகிவிடும். அதுவும் நெஞ்செரிச்சலுக்கு காரணமாகி விடும்.  

உணவு உண்ட பின் படுத்துக்கொள்வது அல்லது குனிந்து வேலை செய்வதால் இந்த எரிச்சல் உண்டாக்கலாம். வழக்கமாக பெண்கள் உணவு எடுத்துக்கொண்ட உடனே குனிந்து நிமிர்ந்து ஏதாவது வேலை செய்வார்கள். வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும் போது அமிலம் மேலேறி நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும்.  

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரண கோளாறு நீண்ட நாட்களாக இருப்பின்  மருத்துவரை அணுகி அதற்கான தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண