மயில்கள் உலகின் மிக அழகான இனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. அவை 1963 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசியப் பறவை என்று அறிவிக்கப்பட்டது. மயில்கள் அதன் வண்ணங்களுக்காக பலராலும் ரசிக்கப்படும் பறவை ஆகும். மேலும் மழை நேரத்தில் தோகை விரித்து நடனம் ஆடும் என்பதாலும் அழகியல் பார்வை மயில் மீது உண்டு. ஆனால் மயில் நெருப்பு கக்கி பார்த்திருக்கிறீர்களா?


வாயில் நெருப்பு விடும் மயில்


புராணங்களில், திரைப்படங்களில், கதைகளில், கார்ட்டூன்களில் டிராகன்கள் மற்றும் டைனோசர்கள் போன்ற விலங்குகளைப் பார்த்திருப்போம். அவை அவற்றின் வாயிலிருந்து நெருப்பை வெளியிடுவது போன்று கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். அது உண்மையா இல்லையா என்பது தெளிவாக தெரியாத நிலையில் சமீபத்தில், ஒரு மயில் அதன் வாயில் நெருப்பை உமிழும் காட்சி அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது.



வைரல் ஆகும் வீடியோ


இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. வீடியோவில் மயில் மேலே பார்த்து சத்தமாக அகவும்போது, அதன் வாயில் இருந்து நெருப்பு வெளியாவது போன்ற காட்சி வீடியோவாக பதிவாகி உள்ளது. ஆனால், மயில் உண்மையில் நெருப்பை உமிழவில்லை. அது கத்தும்போது சூரிய ஒளியால் ஏற்பட்ட ஒரு மாயைதான் அது. அந்த கிளிப் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு விரலாகி வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்: Neeraj Chopra Mother : வீரனை வீரனா பாருங்க.. பாகிஸ்தான் வீரர் ஜெயிச்சாலும் சந்தோஷம்.. நீரஜ் சோப்ரா அம்மாவின் சாட்டையடி பதில்


இன்ஸ்டாகிராம் வீடியோ


"சரியான சூரிய ஒளிக்கு நன்றி, புராண உயிரினம் போல் இருக்கும் இந்த 'தீயை உமிழும்' மயிலைப் பாருங்கள். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!” என்று எழுதப்பட்டு அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 12 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக பலர் நினைத்த நிலையில், பின்னர், சூரிய ஒளி மாயையை உருவாக்கியது தெளிவாக வீடியோவில் தெரிந்தது. 






எப்படி நெருப்பு போல் தோற்றம் அளித்தது?


அந்த வீடியோவில் உள்ள மயில் மிகவும் குளிரான இடத்தில் இருப்பதாக தெரிகிறது. அதனால் அது மூச்சை வெளிவிடும்போது, ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல வாயில் இருந்து புகை வருகிறது. அதில் சூரியனின் ஒளி பட்டு நெருப்பு போல் காட்சி அளித்துள்ளது. பலர் இந்த இயற்கையின் அழகை கண்டு வியந்தனர்.


சில நாட்களுக்கு முன், மயில் ஒன்று வானில் பறந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது. பறவை வானத்தில் உயரமாக பறந்து கொண்டிருந்த கிளிப்பைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு 1 மில்லியனுக்கும் அதிகமான பேரால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.