கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுடன் நடிகர் விஷால் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், சண்டைக்கோழி படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். தனக்கு ஆக்ஷன் படமே செட் ஆகும் என நினைத்த விஷால், திமிரு, பாண்டிய நாடு, மருது, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து சூப்பட் ஹிட் கொடுத்தார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் பிளே பாயாக இருந்த விஷால், பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் பெண் சுபாவம் கொண்ட முற்றிலும் வேறொரு கேரக்டராக மாறி ரசிகர்களை கவர்ந்தார்.
பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நடிகர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் தற்போது இயக்குநராக விஷால் மாறியுள்ளார். துப்பறிவாளன் 2 தவிர, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்துள்ளார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஷாலுக்கு ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும், நண்பர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஷால் தனது பிறந்த நாளை கருணை இல்லத்தில் கொண்டாடியுள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்திற்கு சென்ற விஷால், அங்கிருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அங்குள்ள குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டிய விஷால் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்துள்ளார்.
இதேபோல் விஷாலின் மக்கள் நல இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க: Jason Sanjay: தந்தை வழி அல்லாமல் தாத்தா வழி செல்லும் தளபதி மகன்: விஷயம் இதுதான்!