எலுமிச்சை, நெல்லிக்காய், கீரை போன்ற ஆரோக்கியமானப் பானங்களை உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நிச்சயம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.
புது வருடம் பிறந்தாலே அன்றைக்கு அனைவரும் ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம். நிச்சயம் இந்தாண்டு தொடக்கத்தில் இதனை நிறைவேற்றியே தீர்வோம் என்ற உறுதியுடன் ஒவ்வொரு ஆண்டையும் மக்கள் வரவேற்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. முக்கியமாக இந்த ஆண்டு முதல் தேவையற்ற பாஸ்புட் உணவுகளை உட்கொள்ளாமலும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வோம் என்ற முடிவைத்தான் அதிகளவில் எடுப்பார்கள். இதோடு எப்படியாவது உடல் எடையைக்குறைத்துவிட வேண்டும் என்ற நினைப்பிலும் பலர் இருப்பார்கள். இதுப்போன்ற நினைப்பவர்களில் நீங்கள் ஒருவராக உள்ளீர்களா? ஆரோக்கியமான பணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகளவில் உள்ளதா? அப்படினா.. டீடாக்ஸ் பானங்கள் மூலம் உங்களது ஆரோக்கிய உணவு முறை பயணத்தைத் தொடங்குகள்.
பொதுவாக உங்களது உணவில் இயற்கையான டீடாக்ஸ் பானங்கள் கொடுப்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுவதோடு உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும் என்று உடற்பயிற்சி ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தப் பானங்கள் மூலம் தேவையற்ற பவுண்டுகள் குறைக்கவும் உதவியாக உள்ளது. எனவே பொதுவாக மக்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய மற்றும் ஆரோக்கியம் நிறைந்த டீடாக்ஸ் பானங்கள் குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
நெல்லிக்காய் ஜூஸ்:
நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. மேலும் நெல்லியில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமானப்பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதோடு உடல் எடைக்குறைப்பதற்கும் உதவுகிறது. எனவே உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு இனி மேல் தினமும் காலை வேளையில் நெல்லிக்காய்களை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
தேன் எலுமிச்சை இஞ்சி டீ: சூடான இஞ்சி டீயில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்துச்சாப்பிடலாம். இந்த பானத்தைப் பருகுவதன் மூலம் உடலில் உள்ள தேவையில்ல கொழுப்புகள் குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.
கீரை மற்றும் எலுமிச்சை சாறு:
நம்முடைய அன்றாட உணவில் கீரை மற்றும் எலுமிச்சை சாறுகளை குடிப்பதன் மூலம் நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சியைக்கொடுக்கிறது. மேலும் உடலில் இழந்த திரவத்தை மீட்டெடுக்கவும், உடல் எடை இழப்பிற்கும் உதவியாக இருப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கிறது.
மஞ்சள் இஞ்சி கிரீன் டீ:
தினமும் காலையில் மஞ்சள் இஞ்சி கிரீன் டீயை குளிர்கால நேரங்களில் தினமும் பருகுவதன் மூலம் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே பாத்திரத்தில் 2 டம்ளர் எடுத்து அதனுடன் இஞ்சித்துருவல், மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் நல்ல பலனளிக்கும்.
இந்துப்பு -ஜிஞ்சர் பானம்:
இந்துப்பு (Pink salt )மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கும் பானம் தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானது. இந்த டீடாக்ஸ் பானத்தை தினமும் பருகும் போது, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் மிளகு இஞ்சி கலந்த பானம், இஞ்சி டீ , காரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் போன்றவற்றையும் நீங்கள் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
எனவே இந்தப்புத்தாண்டை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த இதுப்போன்ற டீடாக்ஸ் பானங்கள் மூலம் ஆரம்பியுங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்தப்படி உங்களது உடல் எடைக்குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.