புத்தாண்டுக்கு முந்தைய ஒரு நாளில் மட்டும்  ஆன்லைனில் 33 ஆயிரம் ஆணுறைகள் விற்கப்பட்டதாகவும், அதில் ஒரு நபர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கியிருப்பதாக BlinkIt நிறுவனம் தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இன்றைய வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்களும் தங்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டனர். முன்னதாக வீட்டிற்குத் தேவையான எந்தப்பொருள்களை வாங்க வேண்டும் என்றாலும் தனித்தனியாகக் கடைகளுக்குச் சென்றார்கள். நாளடைவில் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் அனைத்துப்பொருள்களையும் ஒரே இடத்தில் கிடைத்து வந்தது. இருந்தப்போதும் மக்களிடம் தற்போது ஆன்லைன் வர்த்த மோகம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.  என்ன பொருள்கள் நமக்குத் தேவையோ? அதனை சில நிமிடங்கள் ஆர்டர் செய்து விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும் கடைகளில் கேட்டு வாங்கமுடியாதப்பொருள்களைக்கூட ஆன்லைன் மூலம் நாம் பெற முடிகிறது. இதோடு தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்காலங்களில் ஆபர்களுக்குப் பஞ்சமே இருக்காது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கொண்டாடப்பட்ட ஆங்கிப்புத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வழக்கமான இரவு நேரக் கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் கட்டுப்பாடுகளுடன் ஓரளவிற்குக் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



 முன்புக்கூறியது போல புத்தாண்டு நாளில் ஆன்லைன் வர்த்தகத்திற்கான ஆபர்களில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தினர். இந்நிலையில் தான்  புத்தாண்டுக்கு முந்தைய நாளில்  எத்தனைப்பொருள்கள் விற்பனையானது? என்னென்னப் பொருள்களை மக்கள் அதிகளவில் வாங்கினார்கள்? எவ்வளவு  விலைக்கு விற்பனையானது? என்று இந்தியாவின் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதன்படி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் பிளின்கிட் தளத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 33,000 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கியுள்ளது என்ற தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


மேலும், 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 பாட்டில்கள் குளிர்பானங்கள், 6,712 டப் ஐஸ்க்ரீம், 28,240 பாப்கார்ன் அந்த தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதோடு 10,000 கொரோனா சுயசோதனை செய்யும் கருவியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டிற்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 31-ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி சொமேட்டோவுக்கு  மட்டும் ஒரு நிமிடத்துக்கு 7,100 ஆர்டர்களும், ஸ்விக்கு ஒரு நிமிடத்துக்கு 9,000 ஆர்டர்களும் வந்துள்ளதாகவும் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.



இந்த அறிவிப்பை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளையும், கருத்துக்களையும் பதிவிட்டுவருகின்றனர். குறிப்பாக “இது போதுமா? இல்லை இன்னும் ஆர்டர் மீதமிருக்கிறதா? வேறு என்ன தேவை கூறுங்கள்? என்பது பல்வேறு கமெண்ட்ஸ்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகிவருகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று அதிகரிப்பினால் போடப்பட்ட  ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் வாயிலாக மட்டும் பல மடங்கிற்கு ஆணுறைகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.