உங்கள் முடியின் நிலை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தல்,  உங்கள் உடல் சிறப்பாக செயல்பட போதுமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், மழைக்காலத்தில், அதிக முடி உதிர்வது பொதுவானது, இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.


இத்தகைய சூழ்நிலைகளில், ஆர்கானிக் கரைசல்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முடியை பராமரிக்கலாம். கடுகு எண்ணெயில் முடி உதிர்வதைத் தடுக்கும் ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், உங்கள் தலைமுடியை வலுவாக வைத்திருக்க உதவும்.


முடி வளர்ச்சியை அதிகரிக்க கடுகு எண்ணெய், ஒரு வெற்றிலை, ஒரு ஸ்பூன் கலோஞ்சி (கருஞ்சீரக விதைகள்) மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தய விதைகள் போதும். 


1. ஒரு கடாயை எடுத்து அதில் சிறிது கடுகு எண்ணெய் ஊற்றவும். கடாயில் வெற்றிலை, ஒரு ஸ்பூன் கலோஞ்சிமற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.


2. இதை சில நிமிடங்களுக்கு சூடுப்படுத்த வேண்டும். இப்போது, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எண்ணெயில்  இறங்கி விடும். இந்த ஊட்டச்சத்துகள் முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.


3. எண்ணெயில் சேர்த்துள்ள பொருட்கள் கடாயில் ஒட்டாமல் இருக்க பானையை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.


4. 5 நிமிடம் கழித்து கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும்.


5. சல்லடையைப் பயன்படுத்தி எண்ணெயை வடிகட்டவும், பின்னர் அதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


இந்த எண்ணெயை தலையில் தேய்க்கும் போது விரல்களால் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். தலையில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன் தலைமுடி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு, உங்கள் தலைமுடியின் முழு நீளத்திற்கும் எண்ணெய் தடவவும். அடுத்து, ஒரு துண்டை வெந்நீரில் நனைத்து, தண்ணீரைப் பிழிந்து விட்டு, தலையில் சுற்றிக் கொள்ளவும். இது எண்ணெயின் சத்துக்கள் முடியின் வேர்களில் ஊடுருவி, அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.


அரை மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி தலை குளிக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை இதை கடைப்பிடிக்கலாம். இருப்பினும், பயன்படுத்தப்படும் பொருட்களுடன் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், இந்த சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.


மேலும் படிக்க, 


Special Buses: வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு போறீங்களா..!? 200 சிறப்பு பேருந்துகள்.. அறிவித்த போக்குவரத்துக் கழகம்..


Shruthi Shanmugapriya Husband : அதிர்ச்சியில் ரசிகர்கள்.. ’நாதஸ்வரம்’ புகழ் ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்.. காரணம் என்ன?