இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர்களில் மிகப் பிரபலமானவர் வி.ஜே. ஆங்கர் ரம்யா. அண்மையில் தனது ஒவ்வொரு நாளின் முக்கிய பழக்கங்கள் குறித்த தனது யூட்யூப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் என்ன சொல்லியிருக்கிறார்? தெரிஞ்சுக்கலாமா...


“ஒவ்வொரு நாளும் காலை எழுந்திருக்கும்போது நமக்கு பாசிட்டிவ்வாக இருந்தால் அந்த நாள் நமக்கு இருந்தால் நம்மால் எதையும் சாதித்துவிட முடியும். எதை வேணாலும் செய்துடலாம் அப்படிங்கற எனர்ஜி கிடைக்கும். அப்படி பாசிட்டிவ் ஆக்கிக்க நான் தவறாம மூன்று விஷயங்களை தினமும் செய்வேன்.



1.காலை எழுந்ததும் தவறாமல் என்னை நான் ஹைட்ரேட் செய்துகொள்வேன்.ஒரு பாட்டில் தண்ணீர் கண்டிப்பாகப் பருகுவேன். நிறைய பேர் வெதுவெதுப்பான நீர் குடிப்பாங்க. ஆனால் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். 


2. தண்ணீர் குடித்ததற்கு அடுத்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். நான் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வேன். ஜிம் செல்ல முடியாத நாட்களில் வீட்டிலேயே யோகா உடற்பயிற்சி செய்யலாம். உடலை குறைந்த பட்சம் ஸ்ட்ரெச் செய்வது அவசியம். 


3. மூன்றாவது மிக முக்கியமானது, என்னுடைய ப்ரேக்ஃபாஸ்ட். நமது தென்னிந்தியாவில் அத்தனை உணவுகளுமே கார்போ ஹைட்ரேட்தான்.அதனால் புரதம் ஃபைபர் உள்ளிட்ட சத்துகள் கிடைப்பது குறைகிறது. காலை உணவுக்கு புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வேன்.முதல்நாள் ஊறவைத்த ஓட்ஸ், மாதுளை உள்ளிட்டவை சேர்த்த நல்ல திடமான வயிறை நிரப்பும் வகையிலான உணவை எடுத்துக் கொள்வேன்.அது எனக்கு பலவிதமான சத்துகளைக் கொடுக்கும்” என்றார். மேலும்,”இந்த வீடியோவை பார்த்துட்டு ‘பார்க்க நல்லாதான் இருக்கு ஃபாலோதான் செய்ய முடியலை’ என நிறைய பேர் எனக்கு கமெண்ட் செய்திருக்கீங்க. சின்னச்சின்னதாய் முயற்சி செய்யுங்க. உங்களுடைய நாள் எப்படி இருந்ததுனு வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்ங்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.